/indian-express-tamil/media/media_files/2024/11/20/dpNJ7MRztZqwyxhkDB4K.jpg)
காலை உணவுக்கு இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி வேண்டாம்! அவசர நேரங்களில், வெறும் பத்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் கிரிஸ்பியான தக்காளி தோசை ரெசிபியைப் பற்றி இங்கே காணலாம். இந்த தோசைக்கு புளிக்க வைத்த மாவு தேவையில்லை, உடனடியாக அரைத்து உடனே சுடலாம். வீட்டில் இருக்கும் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி, சத்தான மற்றும் சுவையான இந்த மொறுமொறு தோசையை உங்கள் குடும்பத்தாருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். விடுமுறை நாட்களில் அல்லது எதிர்பாராத விருந்தினர்கள் வரும்போது இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். இதனை எப்படி செய்வது என்று சமையல்வித் கிருத்திகா இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - ½ கப்
கோதுமை மாவு - ¼ கப்
பழுத்த தக்காளி - 2
புளிப்பில்லாத தயிர் - ¼ கப்
காஷ்மீரி மிளகாய் (சுடுநீரில் ஊற வைத்தது) - 5 முதல் 6
உப்பு
சோடா உப்பு
நெய்/ எண்ணெய்
செய்முறை:
இந்த இன்ஸ்டன்ட் தக்காளி தோசை மாவை தயாரிப்பது மிகவும் எளிது. முதலில், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அரிசி மாவு, அரை கப் கடலை மாவு, கால் கப் கோதுமை மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும். இதைத் தொடர்ந்து, நன்கு பழுத்த இரண்டு தக்காளிகள், கால் கப் தயிர், நிறத்திற்காகவும் காரத்திற்காகவும் சுடுநீரில் ஊற வைத்த ஐந்து முதல் ஆறு காஷ்மீரி மிளகாய்கள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின், தோசை மிருதுவாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்க ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரை தனியாக எடுத்து வைத்தாலே போதும், மாவு புளிக்கக் காத்திருக்கத் தேவையில்லை. மாவு தயார். இறுதியாக, தோசை சுடும் தவாவை நன்கு சூடாக்கி, அதில் எப்போதும் தோசை ஊற்றுவது போலவே மாவை மெலிதாக ஊற்றவும். அதன் மேல் நெய், பட்டர் அல்லது எண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை சேர்த்து, தீயை மிதமான அளவில் (ஸ்லோ ஃபிளேம்) வைத்து தோசையை ரோஸ்ட் செய்யவும். தோசை நல்ல பொன்னிறமாகி, மொறுமொறுப்பாக மாறியதும் எடுத்து பரிமாறலாம். இது சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us