/indian-express-tamil/media/media_files/2025/07/24/tiffin-kuzhambu-2025-07-24-18-22-38.jpg)
வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத நேரத்தில் என்ன குழம்பு செய்வது என்று யோசனையாக உள்ளது என்றால் இந்த வெறும் குழம்பை ட்ரை பண்ணுங்க. இதனை பேச்சுலர்ஸ் கூட ஈஸியாக செய்யலாம். இதன் பெயருக்கு ஏற்றவாறு, எந்தவொரு காய்கறியும் இல்லாமல், மிகக் குறைவான பொருட்களைக் கொண்டு மிகக் குறுகிய நேரத்தில் இதைத் தயார் செய்து விடலாம். நெல்லை வில்லேஜ் ஃபுட் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்தக் குழம்பு அவ்வளவு வாசமாகவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மிக அருமையாகவும் இருக்கும். மதிய உணவுக்குக் குழம்பு வைக்க எதுவும் இல்லாதபோது அல்லது சோர்வாக இருக்கும்போது, இந்த வெறும் குழம்பு உங்களுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல்
புளி
மிளகாய்த் தூள் 1 முதல் 2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், புளி மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்த உடன், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்தக் குழம்பை நன்றாகக் கொதிக்க விடக் கூடாது என்பது இதன் சுவைக்கு மிக முக்கியமான ஒரு விதியாகும். குழம்பில் உள்ள பச்சை வாசனை போகும் வரை மட்டும் சூடு செய்தால் போதுமானது. குழம்பின் மேற்பரப்பில் சிறிய குமிழ்கள் தோன்றியவுடன் உடனடியாக அடுப்பை அணைத்து விடவும். சுவையான வெறும் குழம்பு தயாராக உள்ளது. இதை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது அதன் அருமையான சுவையை நீங்கள் உணரலாம். புளி சேர்ப்பதால் நாள் முழுக்க இந்த குழம்பு நன்றாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us