/indian-express-tamil/media/media_files/2025/04/29/TYCB40XANuidCrVp346Z.jpg)
உங்களது வீட்டில் இட்லி மாவு நன்கு புளித்தும், இட்லி சுடும்போது மட்டும் டென்னிஸ் பந்து போல கடினமாக வந்து உங்களை ஏமாற்றுகிறதா? பஞ்சு போன்ற மென்மையான, மல்லிகை பூ இட்லியை சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், சரியான பக்குவம் அமையாவிட்டால் இட்லிகள் கடினமாவதைத் தவிர்க்க முடியாது. இதற்கான எளிய டிப்ஸ் ஒன்றை யோகாபைட்ஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த எளிய கிச்சன் டிப்ஸை நீங்கள் பின்பற்றினால், உங்கள் இட்லிகள் இனி ஒருபோதும் கடினமாக வராமல், சும்மா பஞ்சு போல மென்மையாக இருக்கும். இந்த ரகசியத்திற்கு உங்களுக்குத் தேவை ஒரே ஒரு பொருள் தான்.
ரகசியப் பொருள்: தேங்காய் எண்ணெய் - உங்கள் இட்லியை மென்மையாக மாற்றும் மாயாஜாலப் பொருள் வேறொன்றுமில்லை, அது சமையலுக்கு நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் தான்!
செய்முறை:
முதலில் இட்லி ஊற்றுவதற்குத் தயாராக இருக்கும் உங்கள் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில், ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, மாவு முழுவதும் நன்கு கலக்கவும். எண்ணெய் சேர்த்த பிறகு, மாவை மூடி வைத்து சரியாக 15 நிமிடங்கள் அப்படியே தனியாக வைக்கவும். இந்த நேரம் இட்லிக்குத் தேவையான மென்மையை மாவுக்குக் கொடுக்கும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் நன்கு கொதித்த பிறகு (நல்லா கொதிக்கிற தண்ணி) மட்டுமே மாவை இட்லி தட்டுகளில் ஊற்றவும். நன்கு கொதிக்கும் நீரில் வேக வைப்பது இட்லி விரைவாகப் பொங்கி வர உதவும். இப்போது இட்லியை ஆவியில் இருந்து எடுத்தால், அது சும்மா மல்லிகை பூ மாதிரி மென்மையாக இருக்கும். இந்த எளிய குறிப்பைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டு இட்லியின் சுவை மற்றும் மென்மை எப்போதும் குறைவில்லாமல் இருக்கும். இனிமேல் இட்லி செய்யும்போது இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க உங்க இட்லி எப்பவும் சாஃப்ட் ஆக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.