/indian-express-tamil/media/media_files/2025/10/19/idliiii-2025-10-19-17-44-29.jpg)
இட்லி என்பது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி சிறந்த உணவாக இருக்கிறது. இட்லியை ஆவியில் வேக வைத்து எடுப்பதால் சீக்கிரம் செரிமானமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு கொடுக்க இட்லியை தான் பெரும்பாலும் பலர் பரிந்துரைப்பார்கள்.
இந்த இட்லி சில சமயங்களில் நாம் நினைப்பது போல் வருவதில்லை. உளுந்து அதிகமானாலோ அல்லது அரிசி அதிகமானாலோ கல் போன்று இட்லி மாரிவிடும். இதனால் உணவு சாப்பிடுபவர்களுக்கு இட்லி சாப்பிடும் ஆசையை போய்விடும். இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க இட்லிக்கு மாவு அரைக்கும் போது என்ன செய்தால் இட்லி பஞ்சு மாதிரி வரும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 600 கிராம்
உளுந்து - 120 கிராம்
ஜவ்வரிசி
செய்முறை
மூன்று மணிநேரம் ஊற வைத்த உளுந்தை கிரண்டரில் போட்டு அரைக்க வேண்டும். உளுந்து போட்டவுடன் தண்ணீர் ஊற்றக் கூடாது. உளுந்து இரண்டு மூன்று நிமிடங்கள் அரைந்த உடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். முதலில் அரிசியை அரைத்துவிட்டு உளுந்தை அரைக்கக் கூடாது. எப்போதும் உளுந்தை அரைத்துவிட்டு தான் அரிசியை அறைக்க வேண்டும். இதுவும் இட்லி சாஃப்டாக வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
உளுந்தை அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குளிர்ந்த நீரை வைத்து உளுந்தை அரைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உளுந்து நன்றாக பொங்கி வரும். உளுந்து அரைவதற்கு 20 நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தில் குளிர்ந்த நீரை தெளித்து உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உளுந்து மாவு எப்போதும் ஐஸ்கிரீம் மாதிரி இருக்க வேண்டும். அந்த பதம் வந்ததும் மாவை எடுத்துவிட வேண்டும். பின்னர் ஊற வைத்த ஜவ்வரிசியை அரைக்க வேண்டும். ஜவ்வரிசி இரண்டு நிமிடங்கள் அரைந்ததும் அரிசியை போட்டு அரைக்க வேண்டும். அரிசியை மிகவும் விழுதாக அரைத்துவிடக் கூடாது. அரிசி 20 நிமிடம் அரைந்த பின்னர் அரிசியை எடுத்துவிடவும். அரிசி, ரவையை விட கொஞ்சம் சிறிதாக அரைப்பட வேண்டும். இதுதான் அரிசியின் பக்குவம். உளுந்து மாவு உடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும். இதனை தேவைக்கேற்ப புளிக்க வைக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்திரத்தில் இட்லி ஊத்துவதற்கு முன்பு மாவில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இது இட்லியில் வெடிப்பு இல்லாமல் இருக்க உதவும். இதன் பிறகு இட்லி அவித்தால் இட்லி சும்மா பஞ்சு மாதிரி வரும். இனிமேல் இட்லி அவிக்கும் பொழுது இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி இட்லி செய்ங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us