/indian-express-tamil/media/media_files/2025/06/17/C5fPFcUgId7ootkkafdT.jpg)
சின்ன வயதில் இருந்தே நாம் அனைவரும் வெறும் பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் மட்டும் வைத்து செய்யப்படும் ஒரு எளிமையான சட்னியை சாப்பிட்டிருப்போம். அதே ரெசிபியின் சுவையை இன்னும் தூக்கலாக, அட்டகாசமாக மாற்ற வேண்டுமானால், இந்த காரசாரமான கத்தியவாடி பூண்டு சட்னியை நிச்சயம் ஒருமுறை முயற்சி செய்து பார்க்க வேண்டும். இது இட்லி, தோசை மட்டுமின்றி, சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும். இதன் தனித்துவம் தயிர் மற்றும் நல்லெண்ணெய் சேர்ப்பதில் உள்ளது. விரைவாகவும், எளிமையாகவும் தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று குக் வித் மாம் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு - ஒரு கைப்பிடி
தனி மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய்
சீரகம்
உப்பு
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில், ஒரு கைப்பிடி நிறைய பூண்டை தோலோடு சேர்த்து, மிக்ஸி ஜாரில் போட்டு, பல்ஸ் மோடில் ஒண்ணும் பாதியுமாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து நன்கு பொரிய விடவும். சீரகம் பொரிந்த பிறகு, அரைத்து வைத்திருக்கும் பூண்டினை எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.
ஒரு சிறிய பவுலில் 2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூளுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து வைக்கவும். இந்த மிளகாய்த்தூள் கரைசலை பூண்டு கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். சட்னியை நன்கு கிளறி, அதில் இருந்து எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும்வரை கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு, 2 டேபிள்ஸ்பூன் அளவு தயிர் சேர்த்துக்கொள்ளவும்.
தயிர் சேர்த்த பிறகு, கலவையை நன்கு ஒருமுறை கலந்துவிட்டு, கடாயை மூடி போட்டு, அடுப்பை ஸ்லோ ஃபிளேமில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, எண்ணெய் மிதக்க மெதக்க சூப்பரான காதியவாடி கார்லிக் சட்னி தயாராகிவிடும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறவும். இந்த காரசாரமான சட்னியை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us