/indian-express-tamil/media/media_files/2025/10/24/rava-laddu-2025-10-24-11-52-01.jpg)
ரவா லட்டு அனைவருக்கும் பிடித்த இனிப்பு வைகையாகும். தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகை காலங்களில் வீடுகளில் தவறாமல் இடம்பெறும் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று ரவா லட்டு. இது தமிழகம் மட்டுமின்றி, 'சூஜி லட்டு' என்ற பெயரில் வட இந்தியாவிலும் பிரபலமாக உள்ளது.
ரவை வைத்து செய்யப்படும் இந்த இனிப்பு வகை செய்வதற்கு மிக எளிமையாகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது என்பதால் பண்டிகைக் காலங்களில் அதிக அளவில் செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம். ரவா லட்டு நெய் சேர்த்து செய்யப்படுவதால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். சுவை நிறைந்த ரவா லட்டுவை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 100 கிராம்
திராட்சை - 50 கிராம்
ரவை - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
ஏலக்காய் - வாசனைக்கு ஏற்ப
செய்முறை
ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை மிகவும் பொன்னிறமாக வறுக்க வேண்டாம்.மிதமான தீயில் லைட்டாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதே நெய்யில் ரவையை போட்டு வறுக்க வேண்டும். கைவிடாமல் பத்து நிமிடம் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் மிதமான தீயில் தான் வறுக்க வேண்டும் இல்லையென்றால் கரிந்து போய்விடும்.
பின்னர், ஒரு கடாயில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை ஆன் செய்ய வேண்டும். பொதுவாக சர்க்கரையில் அழுக்குகள் இருக்கும் அதனை எடுப்பதற்கு அந்த சர்க்கரை கரைசலில் சிறிது பால் சேர்க்க வேண்டும். பால் சேர்த்ததும் சர்க்கரை நன்கு கொதித்து வரும் அப்போது அதில் உள்ள அழுக்குகள் நுரை வடிவில் மேலே வரும் அதனை நாம் கரண்டியை வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நல்ல கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ரவையை போட்டு கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும்.
இதில் வாசனைக்காக ஏலக்காய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். நெய் சேர்த்த உடன் ரவை கொஞ்சம் தண்ணீர் பதத்திற்கு வரும். அதனை சரி செய்ய ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து ரவையை நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் சிறிது நெய் ஊற்றி ரவையை மூடி போட்டு வைக்க வேண்டும். சிறிதி நேரத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் ரவை நல்ல கெட்டியாகிவிடும். கையில் சிறிதளவு நெய்யை எடுத்துக் கொண்டு மிதமான சூட்டில் ரவையை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடியாகிவிடும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us