/indian-express-tamil/media/media_files/2025/06/11/3Dz0ZInKKThoFzEFKr5k.jpg)
பொதுவாக, சட்னி என்றாலே இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடத்தான் செய்வோம். ஆனால், இந்தத் தக்காளி தண்ணி சட்னி மிகவும் தனித்துவமானது! இதன் புளிப்பு, காரம் மற்றும் உறைப்புச் சுவை மிகச் சரியாக இணைந்துள்ளதால், இதை இட்லி, தோசை மற்றும் ஊத்தப்பத்துடன் நன்றாகப் பிசைந்து உள்ளே தள்ளினால் அதன் சுவை அலாதியானது. வெறும் 5 நிமிடங்களில் செய்துவிடக்கூடிய இந்த ரெசிபி, அவசர காலங்களில் உதவுவதுடன், உங்கள் காலை உணவுக்கு ஒரு புதிய சுவையைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று கௌசல்யா நடராஜன் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 5 அல்லது பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய் - 4
பூண்டுப் பற்கள் - 2
மல்லி இலை
உப்பு
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மல்லி இலைகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை ஒரு மிக்ஸர் ஜாரில் எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டின் முழுச் சுவை இறங்க, இதை மிக மென்மையாக அரைக்கத் தேவையில்லை. அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இது ‘தண்ணி சட்னி’ என்பதால், நீங்கள் இட்லி அல்லது தோசைக்கு பிசைந்து சாப்பிடும் அளவிற்குத் தேவையான தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். உப்பு மற்றும் காரத்தைச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால் கூடுதலாகச் சேர்க்கலாம்.
ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இப்போது பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உடனடியாக அடுப்பை அணைக்கவும். தயாரித்த சூடான தாளிப்பை, சட்னியின் மீது ஊற்றி மெதுவாகக் கலக்கவும். இந்தச் சட்னியை இட்லி, தோசை, பொங்கல் அல்லது உப்புமாவுடன் தொட்டுச் சாப்பிடுவதற்குப் பதில், தாராளமாகப் பிசைந்து சாப்பிட்டு, அதன் அம்புட்டு சுவையை அனுபவியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us