/indian-express-tamil/media/media_files/2025/10/30/nellai-sodhi-2025-10-30-12-17-33.jpg)
திருநெல்வேலி சொதி குழம்பு என்பது தேங்காய்ப் பாலை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு சைவக் குழம்பு வகையாகும். இதில் காய்கறிகள், பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவமானது. குறிப்பாக, இது 'மாப்பிள்ளை சொதி' என்றும் அழைக்கப்படுகிறது. இது இடியாப்பம், ஆப்பம், இட்லி மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு உணவு. இதனை எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால்
பாசிப்பருப்பு
கலவை காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி, முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய்
உப்பு
எலுமிச்சை சாறு
தேங்காய் எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து மசித்துக்கொள்ளவும். தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகளை (உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை) அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். வதக்கிய கலவையுடன் வேகவைத்த காய்கறிகள், உப்பு மற்றும் இரண்டாம்/மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி, காய்கறிகள் முழுமையாக வேகும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
காய்கறிகள் வெந்த பிறகு, மசித்த பாசிப்பருப்பைச் சேர்த்து, குழம்பின் கெட்டித்தன்மைக்கு ஏற்ப சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு, இறுதியாக கெட்டியான முதல் தேங்காய்ப் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். குழம்பு கொதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, அதை சொதி குழம்பில் சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு தயார். இந்த சொதி நிறைய பேருக்கு செய்யத்தெரியாது அப்படியே செய்தாலும் சரியாக வராது என்று புலம்புபவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us