புரட்டாசி ஸ்பெஷல்... சைவ சிக்கன் பிரியாணி; இப்படி செஞ்சா ஊரே பாராட்டும்!

சோயா பீன்ஸ் வைத்து சைவ சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சோயா பீன்ஸ் வைத்து சைவ சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
veg briyani

புரட்டாசி மாதத்தில் பலர் பெரும்பாலும் அசைவ உணவுகளை விரும்புவதில்லை. இறைபக்தி காரணமாகவும் அசைவ உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. இது யாருக்கு சாதகமோ தெரியவில்லை. ஆனால், உணவு பிரியர்களுக்கு மிகவும் பாதகமாக முடிந்துள்ளது. 24 மணிநேரமும் அசைவம் தான் உண்பேன் என்று சொல்லும் உணவு பிரியர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் பெரும் சோதனைகளை சந்திக்கின்றனர்.

Advertisment

எப்படா புரட்டாசி முடியும் அசைவ உணவு சாப்பிடலாம் என்று ஏங்கும் உணவு பிரியர்களுக்காக ஒரு சூப்பரான சைவ சிக்கன் ப்[ரியாணி ரெசிபி உள்ளது. சோயாவில் செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ்

எண்ணெய்

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

வெங்காயம்

பச்சை மிளகாய்

 கொத்தமல்லி

புதினா

தக்காளி

இஞ்சி பூண்டு விழுது

கரம் மசாலா

மிளகாய் தூள்

பிரியாணி மசாலா

தயிர்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் கொதித்ததும் சைவ சிக்கன் பிரியாணிக்கு தேவையான பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன், கொத்தமல்லி இலை, புதினா, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். 

இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறிவிடவும். இதனுடன் தயிர் மற்றும் வேக வைத்த சோயா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரிசி மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தம் போடவும். சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் சைவ சிக்கன் பிரியாணி சூப்பராக ரெடியாகிவிடும். இந்த பிரியாணி உடன் சோயா பீன்ஸ் கிரேவி அல்லது வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் ருசி சூப்பராக இருக்கும்.

Advertisment
Advertisements

சோயா பீன்ஸ் 

சோயா பீன்ஸை சைவ சிக்கன் என்று அழைப்பார்கள். அசைவ உணவுகளில் இருக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இதில் முழுமையாக இருப்பதால், இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். சுமார் 100 கிராம் சோயா பீன்ஸில் 300 கிராம் வரை புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: