முட்டையில் வெள்ளைக்கருவுடன் அதிக புரதச்சத்தும், குறைவான கலோரிகளும் காணப்படுகின்றன.
ஆணோ, பெண்ணோ தங்களின் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றனர். இதுபோன்ற டயட்டில் இருக்கும் நபர்களுக்கு முட்டை ஒரு நல்ல உணவாக உள்ளது.
நீங்கள் தினந்தோறும் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேலையும் முட்டை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவில், 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆகவே நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவுடன் முழு முட்டையையும் சாப்பிட்டுவிட வேண்டும்.
ஏனெனில் பல்வேறு ஊட்டச் சத்து நிபுணர்களும் முட்டை ஆரோக்கியமானது என்றே கூறுகின்றனர். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம், ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ஆகையால் நீங்கள் தினந்தோறும் எக் ஒயிட் ஆம்லேட், கிளாசிக் எக் ஒயிட் ஸ்க்ரம்பிள், வேகவைத்த முட்டை என எடுத்துக் கொள்ளலாம்.
அதிலும் எக் ஒயிட் ஓட்மீல் உடலுக்கு மிக சிறந்ததாக காணப்படுகிறது. இதை வீட்டிலேயே மிக எளிதாக செய்யலாம்.
இதற்கு ஓட்ஸ் ஒரு அரை கப் எடுத்துக் கொண்டு, அத்துடன் வாழைப் பழ துண்டுகள், பால், தண்ணீர் ஆகியவையும் அரை கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இலவங்க பட்டை அரை டீஸ்பூனும், முட்டை வெள்ளைக் கரு கால் கப் அளவும், ஒரு சிட்டிகை உப்பும் தேவை.
முதலில் ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், வாழைப்பழ துண்டுகள், இலவங்க பட்டை தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர், அந்த கலவையில் அரை கப் பால் மற்றும் நீரை சேர்த்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து 6 முதல் 7 நிமிடங்கள் வரை சூடாக்க வேண்டும்.
இது எளிதில் ஒட்டிக் கொள்ளக் கூடும் என்பதால் கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் அது பஞ்சு போன்ற மென்மையான கலவையாக மாறிவிடும்.
அதில் சமைக்கப்பட்ட ஓட்மீல், பீனட் பட்டர், உறைந்த ராஸ்பெர்ரி, வாழைப் பழம் என தேவையானவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil