முருங்கைக் கீரை இரும்புச் சத்து நிறைந்தது என்று சித்த மருத்துவர்கள் முதல் அலோபதி மருத்துவர்கள் வரை எல்லாரும் சொல்கிறார்கள். அதனால், அனைவரும் முருங்கைக் கீரையை பலரும் தங்கள் உணவில் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், முருங்கைக் கீரையை உருவி, ஆய்ந்து எடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். அதுமட்டுமல்ல, முருங்கை கீரை அலசினால் தாமரை இலை நீர் போல, ஒட்டி ஒட்டாமல் இருக்கும். நீங்கள் எப்படிதான் முருங்கைக் கீரையை தண்ணீரில் அழுத்தி எடுத்தாலும் தண்ணீர் ஒட்டியிருக்காது. அதற்காக, முருங்கைக் கீரையை கழுவாமல் இருக்க முடியாது. ஏனென்றால், முருங்கைக் கீரையில் பூச்சிகள், சிறிய புழுக்கள்கூட இருக்கலாம். அதனால், அவசியம் கழுவ வேண்டும். இதற்காகவே முங்கைக் கீரையை தண்ணீரில் அலசுவதற்கு கஸ்பினாஸ் சமையல் யூடியூப் சேனலில் கூறிய ஒரு சூப்பரான டிப்ஸை உங்களுக்காக இங்கே தருகிறோம்.
முருங்கைக் கீரையை உருவி, ஆய்ந்து எடுத்த பிறகு, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றுங்கள். அதில் ஒரு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள், அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து நன்றாகக் கலக்குங்கள்.
இப்போது முருங்கைக் கீரையில் தண்ணீர் எல்லா பக்கமும் பட்டு அலசப்பட்டு இருக்கும். இப்படி கழுவட்ட முருங்கைக் கீரையை மீண்டும் ஒருமுறை வழக்கம்போல சாதாரணமாக தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். இப்படி கழுவும்போது, முருங்கைக் கீரை நன்றாகக் கழுவலாம். உப்பு, மஞ்சள் இந்த பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.