scorecardresearch

கோதுமை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுமா? நிருணர்கள் கருத்து

அமைலோபெக்டிசின் என்பது கோதுமையில் உள்ள ஸ்டார்ச், இதற்கு அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. இந்நிலையில் இது நமது ரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும்.

கோதுமை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுமா?
கோதுமை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுமா?

இந்நிலையில் அதிக உடல் எடையுடன் இருக்கும் நபர்கள், உடல் எடை அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய் வரும் என்று பயப்படுவார்கள். இந்நிலையில் இவர்கள் தவறான உணவை எடுத்துகொள்கிறார்கள் என்று அர்த்தம். குறிப்பாக கோதுமையில், அதிக ஸ்டார்ச் அடிப்படை அளவு இருக்கிறது.

அமைலோபெக்டிசின் என்பது கோதுமையில் உள்ள ஸ்டார்ச், இதற்கு அதிக கிளைசிமிக்  இண்டக்ஸ் உள்ளது. இந்நிலையில் இது நமது ரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும். இந்நிலையில் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் சிலர் சர்க்கரை நோய் வருவதற்கான சாதியக்கூறு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்நிலையில் இவர் கோதுமையை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகமாகும், சர்க்கரை நோய் ஏற்படும்.

இந்நிலையில் கிட்டதட்ட 72 வயதான நோயாளி ஒருவர் காலில் உள்ள விரலை அகற்றும்  அளவுக்கு சர்க்க்ரை நோய் பாதிக்கப்படுள்ளது. இந்நிலையில் எச்.பி.ஏ.1. சி அளவு 12.5-ல் உள்ளது. உடல் எடை 100 கிலோவில் இருந்தது. இந்நிலையில் அவரது  எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு  173  உள்ளது. ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் அளவு 252 ஆக உள்ளது.

இந்நிலையில், அந்த நோயாளி சப்பாத்தியும், பிரட்டு சாப்பிடுபவர், இதனால் மருத்துவர் இதை கைவிடச் சொல்லியிருக்கிறார். மருத்துவர் அவரை, டி.என்.ஏ பரிசோதனை எடுக்கச் சொன்னபோதுதான், அவருக்கு குலட்டின் உணவை, உடல் ஏற்றுக்கொள்ளாது என தெரியவந்தது. இந்நிலையில் அவர் ஒட்டுமொத்தமாக கோதுமை உணவுகளை எடுப்பதை நிறுத்தினார். இதனால் அவரது கொழுப்பு சத்து 35%-ல் இருந்து  25% ஆக குறைந்துள்ளது. 19.83 கிலோ எடை குறைத்துள்ளார். அவரது எச்.பி.ஏ.ஒன்.சி 5 .3 அளவுக்கு வந்துவிட்டது. கிட்டதட்ட கொலஸ்ட்ரால் இல்லாத நிலைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நாம் சர்க்கரை நோய் தொடர்பான இருக்கும், சில கட்டமைப்புகளை நம்புகிறோம். வெள்ளை சர்க்கரை சாப்பிடக்கூடாது என்பதால், வெல்லம் அல்லது பிரவுன் சுகரை  நாம் பயன்படுத்தக்கூடாது , இதுபோல அரிசிக்கு பதிலாக கோதுமை நல்லதுதான், ஆனால் அதனால் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தேன் எடுத்துக்கொள்ளலாம் என்பதும் தவறுதான்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Is overeating wheat pushing us towards diabetes