உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வீட்டிலேயே சிம்பிள், ஹெல்தி உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்தவரிசையில் பாரம்பரியம் மாறாத ஆரோக்கியமான கம்பு கருப்பட்டி பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 2
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
கம்பு, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். ஊறிய கம்பு, உளுந்து, வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.
பின் இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும். இதன்பின் மாவை கலக்கி விடவும். அடுப்பில் பணியாரக் கல் வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு மாவு கலவையை ஊற்றவும். பணியாரம் சிவந்து வந்ததும் குச்சி கொண்டு எடுத்து சூடான பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/