மாங்காய் சீசன் வந்தாச்சு... 'லஞ்ச்'-க்கு குழம்பு வேணாம்; இந்த கேரளா ரெசிபி ட்ரை பண்ணுங்க: செம்ம டேஸ்ட்!
கேரளா ஸ்பெஷல் மாங்காய் சம்மந்தி எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன் இதன் சுவை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
கேரளா ஸ்பெஷல் மாங்காய் சம்மந்தி எப்படி தயாரிப்பது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன் இதன் சுவை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
கேரளாவில் மிகவும் பிரபலமான உணவாக மாங்காய் சம்மந்தி விளங்குகிறது. மிகவும் குறைவான பொருட்கள் கொண்டு விரைவாக செய்வதால் இதனை பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் சுவையான மாங்காய் சம்மந்தி எப்படி செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மாங்காய், எண்ணெய், கார மிளகாய், காஷ்மீர் மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் மற்றும் உப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு நடுத்தர அளவிளான மாங்காயின் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 5 கார மிளகாய் மற்றும் இரண்டு காஷ்மீர் மிளகாய்கள் சேர்த்து வறுக்க வேண்டும்.
அதன் பின்னர், இந்த மிளகாய்களுடன் 5 சின்ன வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி, கொஞ்சமாக கறிவேப்பிலை, துருவிய தேங்காய், நறுக்கி வைத்த மாங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்படி செய்தால் சுவையான மாங்காய் சம்மந்தி தயாராகி விடும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த மாங்காய் சீனனில் இதனை செய்து அசத்துங்கள்.