மாதம்பட்டி ரெசிபி... அட்டகாசமான ரசம் சாதம் வித் வடகம்: இப்படி செஞ்சு பாருங்க!
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது.
Madhampatty Rangaraj rasam sadham Recipe Tamil: நம்முடைய அன்றாட உணவுகளுடன் ரசம் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த அற்புத ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாமல் விரட்டி அடிக்கவும் உதவுகிறது.
Advertisment
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. அதோடு, சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது. பூண்டுகள் செரிமானத்திற்கு உதவுகிறது. இப்படி ஏராளமான பயன்களை கொண்டுள்ள ரசம் வைத்து எப்படி மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் ரசம் சாதம் தயார் செய்வது என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 ஸ்பூன் மல்லி விதை - 1/4 ஸ்பூன் வர மிளகாய் - 1 சின்ன வெங்காயம் - 1 தக்காளி - 2 புளி - சிறிதளவு பருப்பு தண்ணீர் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மல்லி இலை - சிறிதளவு கடுகு - சிறிதளவு எண்ணெய் - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பற்கள் கருவேப்பிலை - சிறிதளவு
சிம்பிள் செய்முறை
முதலில் மிக்சி எடுத்து அதில் மிளகு, மல்லி விதை, வர மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.
பின்னர், கடுகு போட்டு பொரிந்ததும் அதனுடன் பெருங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து, நடுவாக கீறிய 2 பச்சை மிளகாய் சேர்க்கவும். அத்துடன் நசுக்கிய 4 பூண்டு, கருவேப்பில்லையை சேர்க்கவும்.
இதன்பின்னர், அவற்றுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். அதில் இருக்கும் பச்சை வாடை விலகியதும் அவற்றுடன் பருப்பு தண்ணீரை சேர்க்கவும். தொடர்ந்து, தேவையான அளவு உப்பு மற்றும் புளி தண்ணீர் சேர்க்கவும்.
கொதிக்கும் முன் கொத்தமல்லி இலையை போட்டு கீழே இறக்கவும். பிறகு, ஏற்கனவே குழைய வைத்து வடித்த சாதத்துடன் ரசத்தை சேர்த்து மிக்ஸ் செய்தால் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் ரசம் சாதம் தயார். நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க மக்களே!!!