பெரும்பாலும் மாலையில் டீ, காபி குடிக்கும்போது ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிட விரும்புவோம். வீட்டிலேயே செய்த ஸ்நாக்ஸ் ஆக இருந்தால் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். வீட்டிலேயே சுலபமாக செய்ய நிறைய ரெசிபிக்கள் உள்ளன. அந்த வகையில் 10 நிமிடத்தில் ஸ்நாக்ஸ் செய்ய உங்களிடம் ரவை மட்டும் இருந்தால் போதும். ரவை இனிப்பு போண்டா செய்யலாம். பள்ளி சென்று வரும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
முட்டை - 3
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 3
செய்முறை
முதலில் ஒரு கடாய் வைத்து ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து முட்டைகளை உடைத்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தட்டிப்போட்டு கலக்கவும். அடுத்து அதில் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அப்போது தான் கட்டி இல்லாமல் கலக்க முடியும். மாவு கெட்டிப் பதத்தில் இருக்க வேண்டும். இப்போது அந்த மாவு எடுத்து உருண்டை பிடித்து வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொறிக்க வேண்டும். இரு புறங்களும் சிவந்து வந்ததும் எடுக்கலாம். அவ்வளவுதான் ரவை இனிப்பு போண்டா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”