மட்டன் கிரேவிக்கு டஃப் கொடுக்கும் இந்த ரெசிபி... சப்பாத்தி, சாதத்துக்கு சட்டுபுட்டுனு ரெடி பண்ணலாம்; நீங்களும் ட்ரை பண்ணுங்க!

கறிக்குழம்பு ஸ்டைலில் ஒரு வெஜ் கிரேவி அதுவும் சோயா வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கறிக்குழம்பு ஸ்டைலில் ஒரு வெஜ் கிரேவி அதுவும் சோயா வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
soya gravy.jpg

மட்டன் கிரேவியின் சுவையை மிஞ்சும் வகையில், இந்த சோயா கிரேவி சப்பாத்தி, தோசை, இட்லி மற்றும் சாதம் போன்றவற்றுக்கு ஏற்ற ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சுலபமாக தயாரிக்கக்கூடிய ரெசிபி ஆகும். இதனை எப்படி சுலபமாக செய்யலாம் என்று மிஸ்ஸஸ் அனுசதீஷ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

சோயா
உப்பு
எண்ணெய்
மிளகாய்த்தூள்
பெரிய வெங்காயம்
முந்திரி
பூண்டு
மஞ்சள்தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
ஹோல் ஸ்பைசஸ்
தண்ணீர்
மல்லி இலை

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் சோயாவை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். வெந்த சோயாவை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து சோயாவை வதக்கவும்.

வதக்கிய சோயாவை ஒரு கிண்ணத்தில் மாற்றவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய வெங்காயம், முந்திரி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து அரைக்கவும்.

கடாயில் ஹோல் ஸ்பைசஸ் போட்டு அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சோயாவைச் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும். குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை வேக வைக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும். இந்த சோயா கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

Interesting health benefits of eating soya beans Health benefits of soya chunks

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: