கொய்யா மணமாக மட்டுமில்லாமல் அதிக வைட்டமின்களை கொண்டது. இதில் அதிக வைட்டமின் சி இருக்கிறது. இந்த நார்த்து, மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த சர்க்கரையை குறைக்கும். இந்நிலையில் நாம் சாப்பிடும் ஸ்நாக்ஸ்-க்கு சரியான மாற்று இதுதான்.
ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி-யை விட இதில் 4 மடங்கு அதிகம்.
100 கிராம், கொய்யாவில் எவ்வளவு சத்துக்களை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 68, கார்போஹைட்ரேட்: 14 கிராம், நார்சத்து: 5 கிராம், புரத சத்து: 2.6 கிராம், கொழுப்பு சத்து: 0.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம் இருக்கிறது.
இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலஜன் உற்பத்தியில் பங்குவகித்து ஆரோக்கியமான சருமம் தருகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து நல்ல கண் பார்வை கிடைக்க உதவும். இதில் இருக்கும் நார்சத்து ஜீரணத்திற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாத்துகொள்கிறது. மேலும் தீவிரமான நோய்கள் வராமல் பார்த்துகொள்கிறது.
கொய்யாவில் இருக்கும் நார்சத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இந்நிலையில் சுகர் பேஷ்ண்ஸ் இதை தைரியாமாக எடுத்துகொள்ளலாம்.
மேலும் இதில் இருக்கும் நார்சத்து, நாம் வயிறு முழுக்க சாப்பிட்டதுபோல உணர்வை ஏற்படுத்துவதால், இது உடல் எடை குறைக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“