பேரிச்சம்பழம் சாப்பிட்டல், உனடியாக சக்தி கிடைக்கும். மேலும் ரத்த சர்க்கரையை உடனடியாக அதிகமாக்காது. இதில் இயற்கையான இனிப்பு, பிரக்டோஸ், குளுக்கோஸ் நமக்கு உடனடியாக சக்தியை கொடுக்கிறது. கொழுப்பு சத்து மற்றும் புரத சத்து இதில் குறைவாக உள்ளது. செலினியம், காப்பர், பொட்டாஷியம், மெக்னிசியம் ஆகியவை உள்ளது. இதில் பி-காம்பிளக்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட், கெரடிநாய்ட்ஸ், பினாலிக்ஸ் இருக்கிறது.
100 கிராம் பேரிச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்
கலோரிகள்: 227
புரத சத்து: 1.81 கிராம்
கொழுப்பு: 0.15 கிராம்
கார்போஹைட்ரேட்: 74.97 கிராம்
நார்சத்து: 6.7 கிராம்
சர்க்கரை : 66.47 கிராம்
பொட்டாஷியம்: 696 மில்லி கிராம்
இரும்பு சத்து: 0.90 மில்லி கிராம்
மெக்னீஷியம்: 54 மில்லி கிராம்
வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.
இதில் இருக்கும் நார்சத்து வயிற்றின் செயல்பாடுகளை சீராக பார்த்துக்கொள்கிறது. இந்நிலையில் இதில் இருக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்நிலையில் இதில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் கிளைசிமிக் அளவு குறைவாக இருப்பதால், ரத்த சர்க்கரை அதிகமாகாது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆன பிளாபாய்ட்ஸ், கெரோடினாய்ட்ஸ், பினோலிக் ஆசிட் இருப்பதால் நமது மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
மேலும் சில ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் கூடுதல் நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிக நார்சத்து இருப்பதாலும், பல்வேறு சத்துகள் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோய் பாதித்தவர்கள் 1 முதல் 2 பேரிச்சம்பழங்கள் தினமும் எடுத்துகொள்ளலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“