சர்க்கரை நோயாளிகள் நிச்சயமாக கீரை சாப்பிட வேண்டும். இதிலும் குறிப்பாக பாலக் கீரை அதிக நன்மைகளை கொடுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது. இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 20. இதனால் உடனடியாக சர்க்கரை ரத்ததில் வேகமாக கலக்காது. இந்நிலையில் இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இதில் 90 % தண்ணீர் சத்து உள்ளது. மேலும் நார்சத்து அளவும் அதிகம். இதனால் இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும். இது அதிகம் சாப்பிட்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.
இந்நிலையில் இதில் வைட்டமின் கே, சி, கே1 மற்றும் வைட்டமின் பி9 சத்துகள் மற்றும் இரும்பு சத்து, கால்சியம் கொண்டது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் இந்த சத்துக்களின் பண்பு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.
இந்நிலையில் நாம் இந்த கீரையை சாலட் செய்து சாப்பிடலாம், பாலக் பன்னீர் செய்து சாப்பிடலாம். கீரை மற்றும் பருப்பு சேர்த்து கூட்டு அல்லது கிச்சடி செய்து சாப்பிடலாம்.
இந்நிலையில் பாலக் கீரை வைத்து ஜூஸ் செய்ய முடியும். பாலக் கீரை- ஒரு கப், நறுக்கிய வெள்ளரிக்காய், புதினா இலைகள் நறுக்கியது. எலுமிச்சை சாறு, துருவிய இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வடிகட்டி ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“