பசியை தூண்டும் பிரண்டையை வைத்து பிரண்டை சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். பிரண்டை சாப்பிடுவதால் கால்சியம் சத்து கிடைக்கும். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் பிரண்டையை அதிகம் எடுத்து கொள்ளலாம். அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சட்னி செய்வது பற்றி செஃப் தீனா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பிரண்டை - 150 Gms
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உளுந்து - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு- 8 துண்டுகள்
உப்பு
மஞ்சள் தூள்
பெருங்காயம்
கொத்தமல்லி தழை
கருவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 5
புளி
தேங்காய் - 1/2 துண்டுகள்
செய்முறை
பிரண்டையை சுத்தம் செய்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரண்டையை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
பிரண்டை சட்னி | Pirandai Chutney | Breakfast_recipes | Easy Cooking | CDK#133 | Chef Deena's Kitchen
அதே கடாயில் உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதில் தேங்காய் சிறிது சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
அது ஆறியதும் மிக்ஸி ஜாரில் அறைத்து எப்போதும் போல தாளித்து இறக்கினால் புரண்டை சட்னி ரெடியாகிவிடும்.