மாதுளை பழத்தின் நன்மைகள் ஏராளம். இந்நிலையில் க்ரீன் டீயை விட இதில் 3 மடங்கு அதிக ஆன்டி-ஆக்ஸிடன் உள்ளது. மாதுளை சாறு கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இதனால் நமது இதயம் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் இதில் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான மூலப் பொருள் இருக்கிறது. எப்படி மாதுளை சாறை போல், மாதுளை தோலின் சாறும் உடலுக்கு நன்மை தருகிறது.
இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 35 தான் என்பதால் இது ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. அதற்காக ஒரு நாளில் 3 பழங்களை சாப்பிட்டுவது போன்ற விஷயங்களை நாம் செய்ய கூடாது.
தினமும் ஒரு கிளாஸ் மாதுளை சாறு குடித்தால், கொல்ஸ்ட்ராலை கட்டுபடுத்தும். மேலும் டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கும்.தினமும் 125 எம்எல் மாதுளை சாறு குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

இதுபோல ஓட்ஸ் மற்றும் இதுபோன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதுபோல நட்ஸுடன் சேர்த்தும் சாப்பிடலாம் .