மாதுளை பழத்தின் நன்மைகள் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். ரத்தத்தை சுத்தப்படுத்தும், ரத்த சோகைக்கு நல்லது போன்ற சில நன்மைகள் மட்டும் அறிந்திருப்போம். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது நன்மை தருகிறது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்ற பழங்களை விட மாதுளை ஜூஸ்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிஃபீனால்கள் அதிக அளவில் உள்ளது. இதில் க்ரீன் டீ அல்லது ரெட் ஒயின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சுமார் மூன்று மடங்கு அதிகம். மாதுளை குறைந்த கொழுப்புப்புரதம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
மாதுளையில் உள்ள கேலிக், ஓலியானோலிக், உர்சோலிக் மற்றும் ஆலிக் அமிலங்கள் போன்ற கலவைகள் சர்க்கரை நோய்க்கு எதிராக போராடும் பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மாதுளை ஜூஸ் அல்லது பழம் இன்சுலின் திறனை அதிகரிக்க உதவும். இது சர்க்கரை உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
மாதுளை இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா?
மாதுளை ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (35) உணவாகும். அதாவது அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாதுளையில் மிதமான கிளைசெமிக்கும் உள்ளது (18), இது அதிக சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு பாதுகாப்பானது ஆகும்.
மாதுளை பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது. பீனாலிக் கெமிக்கல்ஸ், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இருப்பினும், மாதுளை உள்ள உணவில் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து பயன்படுத்துங்கள். எவ்வளவு மாதுளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்ள மருத்துவரின் அறிவுரை உதவும்.
வெறும் வயிற்றில் மாதுளை சிறந்தது
அதிகபட்ச பலன்களைப் பெற, அதிகாலையில் வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடுவது சிறந்தது. உடற்பயிற்சிக்கு முன் அல்லது உடற்பயிற்சி செய்த பின் கூட மாதுளை சாப்பிடலாம்.
இருப்பினும், மாதுளை அதிகமாக சாப்பிடுவது அல்லது ஜூஸ் குடிப்பது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இது மாதுளையில் உள்ள சர்க்கரையின் காரணமாக ஏற்படலாம். எனவே மருத்துவரின் அறிவுரைப்படி கவனமாக உட்கொள்ளுங்கள்.
மாதுளை சாப்பிட்ட பிறகு உங்கள் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க ஒரு தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டரைப் பயன்படுத்தவும்.
எவ்வாறு சாப்பிடுவது?
- ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் மாதுளை தினமும் இவ்வளவு அளவு தான் சாப்பிட வேண்டும். மாதுளை பழம் (1 கப்) அல்லது ஜூஸ்ஸாக எடுத்துக் கொண்டால் (125 மில்லி)
ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள். - உங்கள் வழக்கமான பழ சாலட்டில் மாதுளை சேர்க்கலாம்.
- நட்ஸ், குறைந்த கார்போகைட்ரேட் பழங்கள் மற்றும் அதில் மாதுளை சேர்த்து சத்தான ஸ்மூத்தியாக தயாரித்து குடிக்கலாம்.