ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: அடுப்பு இல்லாத ஒரு ரெசிபி... காரசாரமான பொரி மிக்சர்!

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா அப்போ இந்த மாதிரி காரா பொரி ட்ரை பண்ணுங்கள்.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா அப்போ இந்த மாதிரி காரா பொரி ட்ரை பண்ணுங்கள்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
pori mixture

ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா அப்போ இந்த மாதிரி காரா பொரி ட்ரை பண்ணுங்கள்.சுவையான காராபொறி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள் 

பொரி
வறுத்த வேர்க்கடலை 
வெங்காயம் - 1 நறுக்கியது 
தக்காளி - 1 நறுக்கியது 
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது 
கொத்தமல்லி இலை
உப்பு  
மிளகாய் தூள்  
சாட் மசாலா தூள்  
எலுமிச்சைபழச்சாறு

செய்முறை

Advertisment
Advertisements

ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள் சேர்க்கவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கலக்கவும். வறுத்த வேர்க்கடலையை சேர்த்து மீண்டும் கலக்கவும்.  இறுதியாக பொரியை  சேர்த்து, அனைத்தையும் விரைவாக கலக்கவும். பொரி மிக்சரை தயார் செய்தவுடன் பரிமாறவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: