/indian-express-tamil/media/media_files/NF1saacD2u3Nv6h9wb41.jpg)
இட்லியைச் சாப்பிட மறுப்பவர்கள்கூட இந்த ரெசிபியின் சுவைக்காக இட்லியைத் தேடி வரக்கூடும்! மிச்சமான இட்லிகளைக் கொண்டு, வீட்டிலுள்ள அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் ஒரு அற்புதமான ஸ்டார்ட்டரை அல்லது மாலை நேர சிற்றுண்டியை எளிதாகத் தயாரிக்கலாம். புத்துணர்ச்சியூட்டும் இந்த 'இட்லி மஞ்சூரியன்' ரெசிபியை எப்படிச் செய்வது என்று மாலினிகிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி 8
கான்பிளவர் மாவு ¼ கப்
தண்ணீர் ½ கப்
உப்பு ½ டீஸ்பூன்
மிளகு பொடி ½ டீஸ்பூன்
மிளகாய் பொடி (சில்லி பவுடர்) ½ டீஸ்பூன்
எண்ணெய்
நறுக்கிய பூண்டு 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி ½ டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் 1
பெரிய வெங்காயம் 1
குடை மிளகாய் 1
உப்பு ½ டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் ½ டேபிள் ஸ்பூன்
தண்ணீர்
மிளகு பொடி ½ டீஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், எட்டு இட்லிகளையும் சிறு சிறு துண்டுகளாக (பீஸ் போட்டு) நறுக்கி எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கான்பிளவர், தண்ணீர், உப்பு, மிளகு பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். நறுக்கிய இட்லி துண்டுகளை இந்தக் கலவையில் சேர்த்து, முழுவதும் டிப் செய்து எடுத்துக்கொள்ளவும்.
எண்ணெயை நன்கு சூடாக்கி, டிப் செய்த இட்லி துண்டுகளை அதில் போட்டுப் பொரிக்கவும். இட்லிகளைச் சேர்த்த பிறகு, இரண்டு வினாடிகள் அப்படியே விட்டு, பின்னர் மெதுவாகத் திருப்பி விடவும். அவை நன்கு சிவக்கும் வரை பொரித்து வெளியே எடுக்கவும். பொரித்த இட்லிகளைத் தனியாகப் பிரித்து வைக்கவும்.
ஒரு பேனில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தீயை 'ஹை ஃப்ளேமில்' வைத்தே வதக்கவும். அடுத்து, கியூப்ஸாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து, அதனுடன் அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து, ஹை ஃப்ளேமிலேயே இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இப்போது, டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், இட்லியை டிப் செய்ய பயன்படுத்திய கான்பிளவர் கலவை மீதமிருந்தால், அதையும், அரை கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலக்கவும். கிரேவி தயாரானதும், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளைச் சேர்த்து, ஹை ஃப்ளேமிலேயே ஒரு நிமிடம் நன்கு கலக்கவும். ஸ்டவ்வை அணைத்த பிறகு, அரை டீஸ்பூன் மிளகு பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளை மேலே தூவி, மீண்டும் ஒருமுறை நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் தயார். இதைச் சுடச்சுட பரிமாறி, அதன் வேற லெவல் சுவையை அனுபவியுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.