/indian-express-tamil/media/media_files/2025/10/30/sambar-2025-10-30-15-45-55.jpg)
எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் எப்போதும் பிடிக்கும். அதிலும் சாம்பார் சாதம் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக சாம்பார் சாதம் செய்ய தனியாக காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பருப்பு, அரிசியை வேக வைக்க வேண்டியதாக இருக்கும். ஆனால், ரொம்ப குயிக்கா இரண்டே விசில்ல சாம்பார் சாதம் எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 1/2 கப்
பருப்பு - 1 1/2 கப்
தண்ணீர் - 9 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 5
பீன்ஸ் - 2
கேரட் - 2
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
உப்பு - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன்
புளி - ஒரு லெமன் சைஸ்
கொத்தமல்லி இலை
நெய் - 50 எம்.எல்
கடுகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
கறிவேப்பிலை
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். இதனுடன் பீன்ஸ், கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் சேர்த்து வதக்க வேண்டும்.காய்கறி ஒரு 50 சதவிகிதம் வெந்ததும் சாம்பார் பொடி சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகளில் பச்சை வாசனை போனதும் 8 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து மிதமான தீயில் இரண்டு விசில் விட்டு எடுத்தால் சாம்பார் சாதம் ரெடியாகிவிடும். இதில் தாளிப்பிற்கு ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் இதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ளவும். இதில் சாம்பார் சாதத்தை சேர்த்து ஒரு சேர கலந்துவிட வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் நெயை சாம்பார் சாதத்தின் மேல் சேர்த்து சூடாக சாப்பிட்டால் சாம்பார் சாதம் சூப்பராக இருக்கும். இதனுடன் சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவை சும்மா டக்கராக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us