Advertisment

கால்சியம் நிறைந்த ராகி: சுவையான மசாலா இட்லி இப்படி செய்யுங்க!

ராகி மசாலா இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ragi masala idly

Food

ராகியில் நார்ச்சத்து, கால்சியம் அதிகளவு நிறைந்து உள்ளது. இதனால் எலும்புகள் வலுப்பெறும்.

ராகி மசாலா இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 4 கப்

உளுந்து - முக்கால் கப்

குடைமிளகாய் - 1

பச்சை மிளகாய் - 3

கேரட் - 1

வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு

பச்சைப் பட்டாணி - கால் கப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - மூன்று, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள். உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வைக்கவும்.

மறுநாள் நன்றாகப் பொங்கி வந்திருக்கும். இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து இட்லித் தட்டில் இந்த மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும் அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து நறுக்கி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு வதக்கவும், கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள். அவ்வளவு தான் சுவையான ராகி மசாலா இட்லி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment