குடல் கழிவை வெளியேற்றும் இந்த ஜூஸ்... வெறும் வயிற்றில் இப்படி செஞ்சு குடிங்க: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
வெண்பூசணி ஜூஸ் அன்றாட நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் குடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அத்துடன், சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வெண்பூசணி ஜூஸ் அன்றாட நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் குடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அத்துடன், சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வெண்பூசணியில் குறைந்த அளவில் கொழுப்பு இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. இதன் சாற்றை நாம் அடிக்கடி பருகி வந்தால் வயிற்று புண்ணை குணமாக்கும்
நம்முடைய வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் ஒன்று வெண்பூசணி. இதனை பரங்கிக்காய் என்று அழைப்பார்கள். இந்த அற்புத காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
Advertisment
வெண்பூசணியில் குறைந்த அளவில் கொழுப்பு இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. இதன் சாற்றை நாம் அடிக்கடி பருகி வந்தால் வயிற்று புண்ணை குணமாக்கும். இது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.
வெண்பூசணியில் துத்தநாகம் இருப்பதால், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் சாப்பிட்டு வரலாம். இது வறண்ட சருமத்திற்கு நன்மை பயக்குகிறது. இதனை அன்றாட நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் குடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அத்துடன், சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
இப்படி ஏராளமான மருத்துவ குணமிக்க வெண்பூசணியை ஜூஸ் அடித்து சாப்பிட்டு வந்தால், உங்களது வாழ்வில் நல்ல மாற்றத்தை காணலாம் என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் வீடியோ ஒன்றில் பேசுகையில், "காலையில் நம்முடைய குழந்தைகளுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் காலையில் காபி, டீ கொடுக்கிறோம்.
Advertisment
Advertisements
சிலர் புரோட்டீன் கலந்த பானம் அருந்துகிறார்கள். இதை அனைத்தையும் நிறுத்தி விடுங்கள். நாளை முதல் இந்த அழகான ஜூஸ் சாப்பிடுங்கள். அது வெண்பூசணி ஜூஸ். இந்த ஒரு ஜூஸ் கண்டிப்பாக உங்கள் வாழக்கையில் பெரிய பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
இந்த ஜூஸ் எப்படி தயார் செய்யலாம் என்றால், வெண்பூசணி தோலை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும். அந்த ஜூஸில் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.
வீசிங், சைனஸ், ஆஸ்துமா உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவேளை விரும்பினால், இந்த ஜூஸுடன் மிளகுத்தூள், இந்து உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். வீசிங், சைனஸ் அதிகமாக இருந்தால், நீங்கள் அதனை அப்படியே விட்டு விடலாம். மற்ற அனைவரும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்நாள் முழுதும் சாப்பிட்டு வரலாம்." என்று அவர் கூறியுள்ளார்.