/indian-express-tamil/media/media_files/2025/09/30/uthappam-2025-09-30-12-34-57.jpg)
அரிசி எதுவும் சேர்க்காமல், உளுந்தைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் இந்த உளுந்து முட்டை ஊத்தாப்பம், காலை உணவுக்காக வீட்டிலேயே செய்து கொடுக்க மிக மிக ஆரோக்கியமான மற்றும் சத்தான தேர்வாகும். வீட்டிலிருக்கும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். உளுந்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடம்பு வலி, கை கால் வலி, இடுப்பு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால், அந்தப் பிரச்சனைகள் சீக்கிரமாகக் குறையும். மேலும் இதனை எப்படி செய்வது என்று ஆர்.கே.பவுல் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உளுந்து 1 கப்
துருவிய தேங்காய் ½ கப்
துருவிய வெல்லம் ¾ கப்
முட்டை 2
ஏலக்காய் 4
உப்பு ½ டீஸ்பூன்
நெய்
செய்முறை:
முதலில் ஒரு கப் உளுந்தை எடுத்து, சுமார் அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். ஊறவைத்த உளுந்தை, ஊற வைத்த அந்தத் தண்ணீரையும் சேர்த்து, மிக்ஸியில் சிறிது சிறிதாகப் போட்டு அரைக்கவும். அப்போது மாவுடன் நான்கு ஏலக்காயையும் சேர்த்து, மாவு நன்கு நைசாக அரைபடும் வரை அரைத்து, ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். ஏலக்காய் சேர்ப்பதால், பிறகு சேர்க்கப்படும் முட்டையின் வாடை இருக்காது.
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் ½ கப் துருவிய தேங்காய், ½ டீஸ்பூன் உப்பு, மற்றும் ¾ கப் துருவிய வெல்லம் சேர்த்து, மாவுடன் இந்தக் கலவைகளை நன்கு கலந்து விடவும். இந்தக் கலவையுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும். முட்டையைச் சேர்த்த பிறகு, மாவு முழுவதும் நன்றாகக் கலக்கும்படி கட்டியில்லாமல் நன்கு அடித்து கலக்கி விடவும்.
தோசைக் கல்லை (தவா) நன்கு சூடாக்கி, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊத்தாப்பம் வடிவில் சிறு வட்டமாக ஊற்றவும். ஊத்தாப்பத்தின் மேல் பகுதியில் நன்கு குமிழ்கள் (பபுள்ஸ்) வந்த பிறகு , ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி, ஊத்தாப்பத்தை மெதுவாகத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வேக வைக்கவும். இப்போது சுவையான, புசுபுசுவென்ற ஆரோக்கியமான உளுந்து முட்டை ஊத்தாப்பம் தயார். இதில் முட்டை வாசம் கொஞ்சம் கூட வராது. இதில் நெய், ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை தேவைப்பட்டால் சேர்க்கலாம் இல்லையென்றால் சேர்க்க வேண்டியது இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.