/indian-express-tamil/media/media_files/2025/10/29/bagara-rice-2025-10-29-12-55-40.jpg)
மணமும் சுவையும் நிறைந்த தெலுங்கானா ஸ்பெஷல்: அட்டகாசமான பகாரா ரைஸ் செய்வது எப்படி?
பிரியாணியின் சுவையில், ஆனால் மிக எளிமையாக செய்யக்கூடிய பாரம்பரிய தெலுங்கானா ரெசிபிதான் பகாரா ரைஸ் (Bagara Rice). இது ஒரு சூப்பர் ஈஸி புலாவ் வகையாகும், இதனை நீங்கள் விரும்பும் கிரேவி அல்லது சால்னாவுடன் சேர்த்து ரசித்துச் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் வீட்டிலேயே சுவையான இந்த பகாரா ரைஸ் எப்படி செய்வது இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மி.லி)
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 3 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
அன்னாசிப்பூ
மராத்தி மொக்கு
ஜாவித்ரி
கல்பாசி
ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
புதினா - 1 கிண்ணம் நறுக்கியது
கொத்தமல்லி இலை - 1 கிண்ணம் நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் நீங்க எடுத்துக்கொண்ட பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். சமைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து சூடாக்கவும். சூடானதும், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா, மற்றும் பிரியாணி இலை ஆகிய அனைத்து வாசனைப் பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்
வாசனைப் பொருட்கள் வதங்கிய பிறகு, நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். அடுத்து, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிடவும். இப்போது, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்று சேர நன்றாகக் கிளறி விடவும்.
வதக்கிய கலவையுடன், நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை (தண்ணீரை வடிகட்டிவிட்டு) பாத்திரத்தில் சேர்க்கவும். பிறகு, 1 1/2 கப் தண்ணீரையும் ஊற்றி மெதுவாக கிளறி விடவும்.
பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில் (Medium Flame) சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து, அரிசி வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். தேவைப்பட்டால், மீண்டும் மூடி வைத்து இன்னும் 5 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வளவுதான்! சுவையான, மணம் நிறைந்த தெலுங்கானா ஸ்டைல் பகாரா ரைஸ் ரெடி. உங்களுக்குப் பிடித்த கிரேவி அல்லது தயிர் பச்சடியுடன் சேர்த்து இந்த அருமையான பகாரா ரைஸை ரசித்து ருசித்துச் சாப்பிடுங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us