இந்த முறை இப்படி தோசை சமைத்து சாப்பிடுங்க உடலுக்கு மிகவும் நல்லது.
பெரிய அளவு பழுத்த தக்காளி – 1
சிறிய துண்டு – இஞ்சி
சீரகம் – 1/4 ஸ்பூன்
சோம்பு – 1/4 ஸ்பூன்
பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை
மிளகாய் பொடி – 1 ஸ்பூன், இவையனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தோசை மாவை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் முன்பு அரைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இந்த மாவுக்கலவையுடன் 2 சிட்டிகை உப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இப்போது இந்த மாவுக் கலவையை 5 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். இதற்கிடையில், தோசைக்கல்லுக்கு மிதமான சூடு சேர்த்து தோசை ஊற்ற தயார் செய்துகொள்ளவும். பிறகு அதில் மாவை ஊற்றி அவை ஓரளவு வெந்து வரும் போது நெய் அல்லது எண்ணெய் விட்டு மொறுமொறுவென இருக்கும் தோசையை எடுக்கவும்.