நெல்லிக்காயில் குளிர்ச்சி தன்மை உண்டு. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் கிருமிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும் நோய் தொற்று நீங்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.
இந்நிலையில் உணவுக் குழாய்யை சீராக்கி, ஜீரணத்திற்கு உதவுகிறது. அஜீரணத்தால் மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், ஒவ்வாமையால் வாந்தி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும்.
இந்நிலையில் இது உடல் எடை குறையவும் உதவும். நெல்லிக்காய்யை இப்படி ஜூஸ் செய்து குடித்தால், உடல் எடை வேகமாக குறையும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 5
இஞ்சி- சிறிய துண்டு
கருவேப்பிலை
உப்பு
எலுமிச்சை
சுடு தண்ணீர்
நாட்டு தேன்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை: நெல்லிக்காய்யை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தொடர்ந்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் கருவேப்பிலை, இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் . தொடர்ந்து இந்த கலவையை சல்லடையில் வடிகட்ட வேண்டும். தொடர்ந்து இந்த சாறுடன் அரை கப் சுடு தண்ணீர் சேர்த்து, வேண்டும் என்றால் நாட்டு தேனை சேர்க்கலாம்.