மருத்துவர் சர்மிகா தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேங்காயின் மகத்துவம் குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “உறவுக்கு முன் விந்து வெளியேறுவதற்கு மது, புகைப்பிடித்தல் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உள்ளது. குறிப்பாக மது அருந்துதல் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆகவே பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க மது, புகைப் பிடித்தலை விட வேண்டும்.
Advertisment
அதேபோல் சாப்பிடும் போது பால், பன்னீர், தேங்காய் பால், வாழைப் பழம் உள்ளிட்ட வெள்ளை நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், “சீரான உடற்பயிற்சியும் அவசியம். நல்ல உணவு சாப்பிட்டா எல்லாமே ரெடி ஆகும்” என்றார்.
தொடர்ந்து, “ஆண்கள் தங்களின் விந்தணுக்களை அதிகரிக்க, நல்ல உணவும், உடற்பயிற்சியும் அவசியம். விரைப்புத் தன்மையை அதிகரித்து நேரத்தை அதிகரிக்க மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது நரம்புகளை பாதிக்கும்” என்றார்.
செக்ஸில் மனதளவில் தயாராவது குறித்து அவர் பேசுகையில், “ஆண்கள் தங்களுக்கு தொப்பை வந்துவிட்டால் தங்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் குழந்தை பிறந்த பின்பும் தங்களின் கணவன் கவனிக்க மாட்டார் என்ற எண்ணம் பெண்களிடமும் உள்ளது.
இதையெல்லாம் மனதுவிட்டு பேசினால் சரியாகிவிடும். கேட்டாலும் கேட்காவிட்டாலும் பேசுங்கள். பிரச்னை சரியாகிவிடும். அதேபோல், பெண்கள் வீட்டில் இருக்கும்போதும் அழகாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், “தேங்காயில் பல்வேறு நன்மைகள் உள்ளன. தினமும் 5 துண்டு தேங்காய் சாப்பிட்டு நடந்தால் எந்த நோயும் வராது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/