There is a ‘perfect way’ to eat an apple | Indian Express Tamil

தினமும் ஒரு ஆப்பிள் உடலுக்கு நல்லது;  ஆனா இப்படி சாப்பிடணும்

ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். மேலும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்ற பழமொழியும் உண்டு.

ஆனால் அந்த ஆப்பிளை எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க  வேண்டும். குடலில் உள்ள நுண்ணுயிரிகளை வளர்க்க உதவுகிறது.

இந்நிலையில் 2019 நடைபெற்ற ஆய்வு ஒன்றில், 240 கிராம் ஆப்பிளில் 100 மில்லியன் பேக்டிரியா இருக்கிறது. இது ஆப்பிளினின் விதைகளில்தான் இருக்குகிறது.

ஆப்பிளின் சதைப்பகுதியில் 10 மில்லியன் பேக்டிரியா இருக்கிறது. இதனால் ஆப்பிளின் விதைகளை மற்றும் நீக்கிவிட்டு அதை ஒட்டுமொத்தமாக சாப்பிடுவதுதான், நமது குடலுக்கு நல்லது.

இந்நிலையில் குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், நமது உணவு செரிமாணமாகும். இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய் தொற்று ஏற்படாது. பி12, தைமைன், ரிபோக்பிலாவின், வைட்டமின் கே  ஆகியவற்றை ஒன்றிணைக்க உதவுகிறது.  

இதுபோல ஆப்பிளின் விதைகளை நாம் நிச்சயமாக சாப்பிடக் கூடாது அதில், விஷத் தன்மை இருக்கிறது. இதனால் ஆப்பிளை சாப்பிடும் முன்பு முழுவதுமாக சாப்பிட வேண்டும். ஆனால் விதையை நீக்கிவிட வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: There is a perfect way to eat an apple