/indian-express-tamil/media/media_files/2025/06/23/kitchen-hacks-2025-06-23-14-47-44.jpg)
அன்றாட சமையலில் நாம் எதிர்கொள்ளும் சிறுசிறு சவால்களை எதிர்கொள்ள, எளிய குறிப்புகள் நமக்கு பெரிய அளவில் உதவக்கூடும். காலை உணவு முதல் இரவு உணவு வரை உங்கள் சமையல் கலையை மேம்படுத்தும் சில முக்கியமான டிப்ஸ்கள் பற்றி பல்லாண்டு வாழ்க டிப்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கும் டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம்.
மொறுமொறுப்பான தோசைக்கு: தோசை சுடும்போது, தோசை மாவில் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து சுட்டால், தோசைகள் பொன்னிறமாக, மொருமொறுப்பாக வரும். இது தோசையின் சுவையை அதிகரிக்கவும் உதவும்.
புளிக்காத இட்லி மாவுக்கான ரகசியம்: இட்லி மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க, காம்பு நீக்காத வெற்றிலையை மாவுப் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போட்டு வையுங்கள். இதனால் மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
சாம்பாரின் கூடுதல் சுவைக்கு: சாம்பார் வைக்கும் போது, வறுத்த வெந்தயத்தை சிறிது தூளாக்கி அதில் சேர்த்தால், சாம்பார் மிகவும் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
விரைவாக வேகும் கிழங்குகள்: கிழங்கு வகைகளை (உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவை) வேக வைக்கும் முன், பத்து நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால், அவை சீக்கிரமாக வெந்துவிடும்.
கையில் ஒட்டாத சப்பாத்தி மாவு: சப்பாத்திக்கு மாவு பிசையும் முன், உங்கள் கைகளில் சிறிதளவு உப்பைத் தடவிக்கொண்டு பிசைந்தால், மாவு கையில் ஒட்டாமல், சுத்தமாக இருக்கும். இந்த எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் அன்றாட உணவில் கூடுதல் சுவையையும், வசதியையும் பெறலாம்.
அதிக உப்புச் சுவையை சமன் செய்ய: சமையலில் தவறுதலாக உப்பு அதிகமாகப் போய்விட்டால், கவலை வேண்டாம். அதில் உருளைக்கிழங்கை அறிந்து போட்டால், அது உப்பை உறிஞ்சி எடுத்துவிடும்.
இட்லியை மிருதுவாக்க: இட்லி சுடும் மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இது இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்க உதவும்.
பளபளப்பான பாத்திரங்களுக்கு: உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரைக் கொண்டு பாத்திரங்களைக் கழுவினால், பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.