/indian-express-tamil/media/media_files/2025/09/26/venkatesh-bhat-2025-09-26-00-03-51.jpg)
செஃப் வெங்கடேஷ் பட் காலை உணவு ரெசிபி, சுவையோடு ஆரோக்கியத்தையும் கொண்டது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது. பஞ்சு போன்ற தேங்காய் தோசையுடன், காரசாரமான முருங்கைக்கீரை சட்னியைச் சேர்த்துச் சாப்பிடுவது ஒரு சிறப்பான காலை உணவு கலவையாகும். இதனை எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
துருவிய தேங்காய்
வடித்த சாதம்
வெந்தயம்
உப்பு, தண்ணீர்
முருங்கைக்கீரை
துருவிய தேங்காய்
வரமிளகாய்
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
பூண்டு
புளி
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை:
பச்சரிசி மற்றும் வெந்தயத்தை எடுத்து குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் துருவிய தேங்காய், வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு நன்கு மையாக அரைக்கவும். அரைத்த மாவை 8 முதல் 10 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். மாவு இயற்கையாக புளித்து பயன்படுத்த தயாராக இருக்கும். புளித்த மாவை நன்கு கலந்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தோசை ஊற்றும் பதத்திற்கு கொண்டு வரவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். பின்பு, ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக்கீரையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும். வதக்கிய கலவையுடன் துருவிய தேங்காய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை கொண்டு தாளித்துக் கொட்டவும்.
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி மெல்லிய அல்லது பஞ்சு போன்ற தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக (golden brown) வரும் வரை சுட்டெடுக்கவும். சத்துக்கள் நிறைந்த தேங்காய் தோசையை, சுவையான முருங்கைக்கீரை சட்னியுடன் சேர்த்துப் பரிமாறி மகிழவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.