கெமிக்கல் போட்டு பழுத்த மாம்பழம்? ஈஸியா கண்டுபிடிக்க தண்ணீர் போதும்!
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாம்பழங்கள் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்கும் வழிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கோடை காலம் வந்துவிட்டதால் சந்தையில் ஏராளமான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதை காணலாம். இவற்றின் தேவை மற்றும் விற்பனை அதிகமிருப்பதால், அவற்றை ரசாயன ஊசி மூலம் செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். அந்த வகையில் ரசாயன பழங்களை கண்டறியும் குறிப்புகள் இங்கே உள்ளன.
Advertisment
மாங்காய்கள் இரசாயன ரீதியாக பழுத்தவையா என்பதை சரிபார்க்கும் வழிகள்
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை உண்ணும்போது, நாக்கில் சின்னதாக எரிச்சல் உணர்வு ஏற்படும். சிலருக்கு வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்.
ரசாயன முறையில் பழுக்காத மாம்பழங்கள், சாறுடன் ருசியாக காணப்படும்.
வேதியியல் முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களின் கலவையான மேற்பரப்பைக் கொண்டிருக்கலாம், சில இடங்களில் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்தில் நிற்கும்.
மாம்பழங்களை தண்ணீரில் மூழ்க விடவும். இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் நீரில் மூழ்கிவிடும். செயற்கையாக பழுத்த மாம்பழங்கள் நீரில் மிதக்கும்.
மாம்பழத்தை வாங்கும்போது அழுத்திப் பார்த்து வாங்கவும். மாம்பழம் முழுவதும் ஒரே மாதிரி காணப்பட்டால் அது இயற்கையாக பழுத்த மாம்பழமாக இருக்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் ஆங்காங்கே திட்டுகள் போல் காணப்படலாம்.
பக்க விளைவுகள் என்னென்ன
மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தில் ரசாயனத்தில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உள்ளது,
மாம்பழங்கள் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறியும் எளிய வழிகள் உள்ளன.
இதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, பலவீனம், தோல் புண்கள், நாள்பட்ட கண் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், நரம்பு மண்டலத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக மூளையின் வீக்கம், நினைவாற்றல் இழப்பு, குழப்பம் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“