பாலூட்டும் தாய்மார்களுக்கு புளியடிச்சான் சம்பா என்ற வகை அரிசி. பிறந்த குழந்தை ஒல்லியாக இருக்கிறது, உடல் எடை அதிகரிக்க மாப்பிளை சம்பா சரியாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
உணவின் முக்கியத்துவம் பற்றி சித்த மருத்துவர் சிவராமன் பேசியதாவது: ” உலக சிறுதானிய ஆண்டு என்று உலகம் முழுவதும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இதற்கு சிறப்பான நிகழ்வுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இதை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இப்போதுதான் அனைவரும் சிறுதானிய உணவை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை 20 வருடங்களுக்கு முன்பாக நம்மிடம் சொன்னவர் மறைந்த நம்மாழ்வார். ஆய்வு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அந்த நிறுவனம் உலகம் முழுவதும் அரிசியை ஏற்றுமதி செய்யும் நிறுவனம். ஆய்வு சார்ந்து உலகம் முழுவதும் உள்ள அரிசியைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
அரிசியில் நன்மைகள் இருக்கிறதா? நல்ல அரிசி இருக்கிறதா? என்று நாங்கள் தேடுவோம். மரபு அரிசிகள் பற்றிய குறிப்பு நான் படித்த சித்தா மருத்துவ பாடத்தில் இருந்தது. நல்ல நீரிழிவை போக்குங்கான் மெல்ல பசியளிக்கும் மணிச்சம்மா என்ற வரி இருந்தது. மெல்ல பசியளிக்கும் மணிச் செம்பா என்ற வார்த்தைக்கு அர்த்தை தேடினேன். அப்போது இது மொதுவாக உடலில் கரையும் என்பது தெரியவந்தது. நாம் சாப்பிடும் உணவு எப்படி மெதுவாக உடலில் கரையும் பண்பு இருப்பதாக அதில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தன்மை ஓட்ஸில் இருப்பதாகவும், பாரம்பரியமான கோதுமை ’பக்கட்’ கோதுமையில் இருப்பதாகவும் ஆய்வுகள் நடைபெறுகிறது. எனக்கு இந்த அய்வை அரிசியில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. க்லாடு ஆல்வாரிஸ் எழுதிய கட்டுரை நம்மாழ்வார் படிக்கச் சொன்னார். 1 லட்சத்து 76 ஆயிரம் வகை அரிசி இந்தியாவில் இருந்ததாக இதில் கூறப்பட்டுள்ளது. ஒரிசாவில் உள்ள பூரி ஜெகன் நாதர் ஆலையத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக விளைந்த அரிசியை இறைவைனுக்கு படையலிடுவார்கள். அந்த கோவிலை சுற்றி மட்டும் 365 வகை அரிசி வகை இருந்திருக்கிறது.
நெல் ஜெயராமன் பற்றி நம்மாழ்வார் என்னிடம் கூறினார். மறைந்த நெல் ஜெயராமன் தனிமனிதராக டெல்டா பகுதியில் உள்ள 171 அரிசி வகைகளை மீட்டுள்ளார். அதன் படிமம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. பாலசுப்பிரமணியம் எனப்வர் ’ பழைய பாரம்பரிய அரிசி இனங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதை வாங்கிப் படித்திருக்கிறேன். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ‘உள்ளகார்’ என்ற அரிசி இருக்கிறது. அதுவே பாலூட்டும் தாய்மார்களுக்கு புளியடிச்சான் சம்பா என்ற வகை அரிசி. பிறந்த குழந்தை ஒல்லியாக இருக்கிறது, உடல் எடை அதிகரிக்க மாப்பிளை சம்பா சரியாக இருக்கும். உடல் செரிமாணம் ஆகவில்லை என்றால் தூயமல்லி சம்பா.
அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைக்கு கருங்குருவை கொடுக்க வேண்டும். அதுவே நோய்வாய்பட்ட வயதானவர்களுக்கு காட்டு யானை கொடுக்கலாம். தீவிர நோயாளிகளுக்கு கருப்பு கவுணி அரிசி. ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்றவாறு அரிசி இருந்தது. எல்லாவற்றையும் தொலைத்துவிடோம். பசுமை புரட்சி என்ற பெயரில், நமது எல்லா வித அரிசியையும் தொலைத்துவிட்டோம். நம்மூரில் விளையும், குறிப்பாக டெல்டாவில் விளையும் அரிசியை கூட நாம் சாப்பிடுவதில்லை, துங்கபத்ரா நதிக்கு அருகே விளையும் அரிசி வகையை நாம் இப்போது சாப்பிடுகிறோம். ஆந்திராவில் இருந்து வரும் பப்பட் லால் அரிசிதான் இப்போது பொன்னி என்று சாப்பிடுகிறோம். நம்மூரில் விளையும் பொன்னியாரிசியை கூட நாம் சாப்பிடுவதில்லை. நமது மரபு அரிசியில், உதாரணமாக மாப்பிள்ளை செம்பாவில், அதன் மேலே இருக்கும் சிவப்ப நிறத்தை லைக்கோபென் என்று அழைப்போம். அதுதான் ஆண்டி ஆக்ஸிடண்ட். புற்று நோய் வரைக்கும் தடுக்கும் தன்மை அந்த லைக்கோபென் என்ற பொருளுக்கு இருக்கிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியில் அது கிடையாது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.