scorecardresearch

கோதுமை புல்லில் இருந்து செய்யப்படும் பவுடர்: உடல் எடை குறைக்க சிறந்த வழி இதுதான்

கோதுமைப் புல் பொடி என்பது, முளைகட்டிய கோதுமை இலைகளால் செய்யப்படுகிறது. இதை ’பசுமை ரத்தம்’ என்று கூறுவார்கள். இந்த பொடிக்கு காட்டமான வாசனை இருக்கும். இதனால் இது பலருக்கு பிடிக்காது. குறைந்த சூடு கொண்ட தண்ணீரில் இந்த பொடியை கலந்து குடிக்கலாம்.

உடலில் உள்ள தேவையற்ற நஞ்சுகளை அது வெளியேற்றும். இதில் 17 வகை அமினோ ஆசிட் இருக்கிறது. இதில் இருக்கும் கொரோலோபில், கிருமி நாசினியாக செயலாற்றும்.

இது வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்றும். இதனால் ஜீரணம் சீக்கிரமாக நடைபெறும். இது இயற்கையிலேயே ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது.

இதில் செலினியம் இருப்பதால்,  இது உடல் எடை குறைக்க உதவும். மேலும் இந்த செலினியம் தைராய்டு ஹார்மோனக்ளை சீராக்கும்.

இதில் இருக்கும் சத்து கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் குறைக்கும் நல்ல கொலஸ்ரால் ஆன எச்.டி.எல் அதிகரிக்கும்.    மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகியவை இருப்பதால் நமது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Wheat grass for weight loss and overall health

Best of Express