தைராய்டு நோய் ஏற்பட்டவுடன், கோதுமை, கேபேஜ்,, காலிபிளவர், ஆகியவை சாப்பிடக் கூடாது என்று கூறப்படும். ஆனால் அதை தவிர்க்க தேவையில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நியாவில் நடைபெற்ற ஆய்வில் நகர்புறங்களில், 10 முதல் 19 சதவிகிதத்தினருக்கு தைராய்டு நோய் ஏற்படுகிறது என்று கூறப்பபட்டுள்ளது. டி3 மற்றும் டி4 ஹார்மோன்கள் குறைப்பாட்டால்தான் தைராய்டு நோய் ஏற்படுகிறது. ஹைப்போ தைராய்டு நோய்யின் அறிகுறியாக உடல் எடை அதிகரித்தல், வரண்ட சருமம், முடி உதிர்வு, வீக்கம், மலச்சிக்கல் ஏற்படும். இதுபோல ஹைப்பர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை இழப்பு, பதற்றம்,அதிக சூடு ஏற்படும்.
ஐயோடின் தான் தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய அங்கமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உப்பில் இது இருப்பதால், இதுவே போதுமானதாக இருக்கும் . இருந்தாலும் நாம் உணவையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். செலிணியம் மிகவும் முக்கியமான சத்தாக பார்க்கப்படுகிறது. செலிணியம் சிக்கன், பன்னீர், மஷ்ரூம் மற்றும் கீரையில் இருக்கிறது.
பால் பொருட்களில் குறைந்த ஐயோடின் இருப்பதால் அதை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பால் மற்றும் பால் பொருட்களை நாம் சாப்பிடலாம். இதுபோல குலுட்டின் இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. இதனால் கோதுமை, பார்லி ஆகியவற்றை தவிர்க்க வேண்டாம்.