2017/2018 ஆம் ஆண்டிற்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் சீசன், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் 25-வது வருட சீசன் இது என்பது சிறப்பம்சமாகும். முதல் வார போட்டிகள் ஆகஸ்ட் 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கிளப்பில் விளையாடும் அணிகள் மற்ற அணிகளை இருமுறை ரவுன்ட் ராபின் முறையில் எதிர்கொள்ள வேண்டும். அந்த இரண்டு போட்டிகளும் முறையே இரு அணிகளின் ஹோம் கிரவுண்டில் நடக்கும்.
அதாவது, இந்த சீசனின் முதல் மாதத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் அணி செல்சா அணியை 'ஓல்ட் டிராஃபோர்ட்' மைதானத்தில் எதிர்கொண்டால், அடுத்த சில நாட்களில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதும் போது, அந்தப் போட்டி செல்சா அணியின் ஹோம் கிரவுண்டான ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் நடைபெறும்.
'மான்செஸ்டர் டெர்பி' என்றழைக்கப்படும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் இடையிலான ஆட்டம் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மான்செஸ்டர் அணிக்கும் லிவர்பூல் அணிக்கும் இடையிலான ஆட்டம் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
செல்சா அணி முதன்முதலாக அர்செனல் அணியை செப்டம்பர் 17-ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதேபோல், செல்சா அணியும் டொட்டென்ஹெம் ஹாட்ஸ்பூர் அணியும் முதன்முதலாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி மோதுகின்றன.
இந்த சீசனில் நடக்கும் முதல் வடக்கு லண்டன் டெர்பி போட்டிகள்... அதாவது, டொட்டென்ஹெம் ஹாட்ஸ்பூர் அணியும் அர்செனல் அணியும் நவம்பர் 18-ஆம் தேதி சந்திக்கின்றன.
இதுதவிர மற்ற கால்பந்து தொடர்களான எஃப்ஏ கோப்பை, இங்கிலீஷ் லீக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பா லீக் ஆகியவற்றின் போட்டிகளும் தற்போது நடந்து வருகின்றன.