ஸ்பெயினின் மிகப்பெரிய கால்பந்து லீக் என்றால் அது லா லிகா தான். 1929-ஆம் ஆண்டு இந்த கால்பந்து தொடர் அறிமுகம் ஆனது. இதுவரை மொத்தம் 60 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கின்றன. அதில் 9 அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதிலும் குறிப்பாக ரியல் மாட்ரிட் அணி 33 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
பார்சிலோனா அணி 24 முறை சாம்பியன் பட்டம் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் அத்லெடிக் பில்போ என்ற அணி தான் அதிகமுறை தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை வென்று வந்தது. ஆனால், அதன்பின் 1950லிருந்து 1980 வரை ரியல் மாட்ரிட் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன்பின், 1990-களில் பார்சிலோனா 14 முறையும், ரியல் மாட்ரிட் அணி 8 முறையும் பட்டத்தை வென்றுள்ளன. இவை மட்டுமில்லாது
அட்லெடிகோ மாட்ரிட், வாலன்சியா மற்றும் டெபோர்டிவோ டி லா கொரூனா ஆகிய அணிகளும் லா லிகா தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன. 2010-களில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வலிமையான அணியாக உருவெடுத்தது.
ஐரோப்பிய கால்பந்து தொடர்களிலேயே லா லிகா தான் முதன்மையான தொடராக கடந்த ஐந்து வருடங்களாக உள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் முதன்மையான கால்பந்து கிளப் என்ற பெருமையை 20 முறை லா லிகா பெற்றுள்ளது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் 17 முறையும், யுஇஎஃப்ஏ ஐரோப்பா லீக் 10 முறையும், யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை லீக் 14 முறையும், ஃ பிபா கிளப் உலகக் கோப்பை டைட்டிலை 5 முறையும் லா லிகா கிளப்பில் உள்ள அணிகள் வென்றுள்ளன.
2017-18 சீசன் லா லிகா தொடர் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கியது. 2018 மே மாதம் 20-ஆம் தேதி இத்தொடர் நிறைவு பெறுகிறது.