Rasi Palan 4th December 2020 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th December 2020: இன்றைய ராசி பலன், டிசம்பர் 3, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20): சந்திரனின் பார்வையால் திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளின் புதிய உத்வேகத்தை அனுமவிக்க சிறந்த தருணம் உண்டாகும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) ஓய்வு நாளான இன்றும், பணிக்கு செல்ல நிர்பந்தப்பட்டிருப்பீர்கள். வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். அனைத்திற்கும் தயாராக இருங்கள். முதியோர், பெற்றோர் ஆகியோரிடம் அன்பை வெளிபடுத்துங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) வருமானத்தை அதிகரித்தல் தொடர்பான முயற்சிகளை முன்னெடுங்கள். இளையவர்கள், முதியவர்கள் என அனைவரிடத்திலும் ஆலோசனையை கேட்டு பெறுங்கள். தயக்கமின்றி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): தற்போதைய வாழ்க்கை சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்ற உங்களின் உள்ளுணர்வை எப்போதும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். எடுத்தோம், கவுத்தோம் என செயல்பட வேண்டாம். நண்பர்கள் சொல்வதை நீங்கள் தவறுதலாக புரிந்துக் கொண்டிருக்கலாம் (அல்லது) சொல்ல வருவதை உங்கள் நண்பர்கள் தவறுதலாக சொல்லியிருக்கலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23): அதிர்ஷ்டத்தைக் காட்டிலும் சொந்த வழியில் முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டிருப்பதால் வெற்றி உறுதியாகும். நீங்கள் செய்வது சரி என்று மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவது முக்கியம் என்பதனை மறந்து விடாதீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : மற்றவர்களின் ஆதரவை பெற கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது. வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். கிரகங்கள் சாதகமான இடத்தில் உள்ளதால், எண்ணிய காரியங்கள் ஈடேறும். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்.பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்..
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : நிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகள் மேற்கொள்வீர்கள். சட்ட விவிகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். புதிய ஐடியாக்களை அமல்படுத்துவீர்கள். தலைமை ஏற்று சில நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். சிறப்பான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19): எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். இலக்கை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையும். விரயத்தை தவிர்ப்பீர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): சிறப்பான நாள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.