Advertisment

Rasi Palan 03rd October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 03rd October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 03rd October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 03rd October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 03rd October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 03rd October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 03, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வரவுக்கு ஏத்த செலவுகள் இருக்கும் என்பதால் நிதி விவகாரங்களில் அதிக முயற்சி அவசியம். கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்பீர்கள். உணர்ச்சிவசப்படுவதால் நல்ல நட்புகளை இழக்க வாய்ப்பு

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இதனால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வாழ்வின் எதிர்கால நலனுக்காக சிந்தித்து செயல்படுவீர்கள். அசாத்திய முயற்சிகளினால், சாத்தியமற்ற விவகாரங்களையும் சாதிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை எக்காலத்திலும் மறக்க வேண்டாம். உங்களது எதிர்கால திட்டங்களுக்காக பிறரின் ஆலோசனைகளை பெறுவீர்கள். சிறு பயணங்களால் மனம் மகிழ்வீர்கள். நீண்டநாள் நண்பர்களை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

புத்துணர்ச்சியுடன் நாளை துவங்குவீர்கள். பழைய ஏமாற்றமான நிகழ்வுகளை மறப்பீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். பிறர் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு அளிப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முடிவு செய்யப்பட்ட விசயங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நிதிவிவகாரங்கள் நல்லவிதமாக இருக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கடினமான தருணங்களை எதிர்கொள்ள நேரிடும். மன சஞ்சலத்திலிருந்து உள்ளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும். பிரச்னைகளை மற்றவர்களுடன் பகிர்வதனால் அது பாதியாக குறைகிறது என்ற நம்பிக்கை ஏற்படும். ஆனால், அது போதிய அளவிற்கு பலன் தராது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மன சஞ்சல நேரத்தில் பணபரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். இதன்காரணமாக பெரிய அளவிலான இழப்புகளை தவிர்க்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். தியானம் செய்வதனால் மனஅமைதி ஏற்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களுடனான உறவு பலப்படும். கணவன் - மனைவி இடையே மனகசப்புகள் வந்து நீங்கும், உடல்நலத்தில் அக்கறை வேண்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களுக்கு ஒரு காலம் வரும், அதுவரைக்கும் காத்திருங்கள். அவசரம் வேண்டாம். சில விசயங்களில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சவால்களை திறம்பட எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அசாதாரணமாக காரியங்ளையும் அசால்ட்டாக செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கிரங்கள் சாதகமான பலன்களை தருகின்றன. மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றமான நாள். பிஸியாக இருப்பீர்கள். ரகசியங்களை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளிநாடு, வெளிமாநிலத்தில் உள்ளவர்களினால் நல்ல தகவல்களை பெறுவீர்கள். உங்களுள் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்வீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment