Today Rasi Palan, 15th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 15th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 15, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் யோசிக்காமல், மற்ற சமூக சிக்கல்களையும் களையும் பணியில் ஈடுபடுவீர்கள். குறிப்பாக, உங்கள் பெரிய குடும்பத்தில் இருந்து இந்த அகண்ட உலகத்தை காண வருவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
சமீப காலமாக உங்களுக்குள் நிலவி வந்த குழப்பங்களில் இருந்தும், கோபத்தில் இருந்தும் இன்று மாலை முதல் விடு பட போகிறீர்கள். ஏனெனில், இன்று மாலையில் இருந்து சந்திரன் உங்கள் ராசிக்கு நண்பனாகவிருக்கிறது. வார இறுதி வரை உங்களுக்கான அமைப்பு நன்றாகவே உள்ளது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களைச் சுற்றி இருப்போர் மற்றும் உங்க துணை ஆகியோரின் உணர்வுகளை உங்களிடம் சொல்ல அனுமதியுங்கள். ஆனால், அவர்களது கவலைகளுக்கும், புகார்களுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற எந்த காரணமும் கிடையாது. ஆகையால், உங்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது. நீங்களாக அப்படி கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஆனால், உங்களைப் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தொல்லைகளும், மன அழுத்தங்களும் உங்களை தேடி வந்து சேரும். அவற்றை நீங்கள் புறந்தள்ளிவிட முடியாது. அப்படி திருப்பி அனுப்பினாலும் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.அடுத்த வாரம் உங்கள் துணையுடன் மீண்டும் பேச ஆரம்பிப்பீர்கள். ஆகையால் தருணங்களையும், தகவல்களையும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்க அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவது சந்திரனின் நிலையற்ற மாறுபாடே. அது இப்போது உங்கள் வீடு வரை வந்து உங்கள் சிந்தனைகளையும் ஆளும். இருப்பினும், இதன் மூலம் சூழல்களை சிறப்பாக கையாள்வது குறித்தும், உண்மை தன்மையை புரிந்து கொள்ளும் ஆற்றலும் உங்கள் சிந்தனை பெறும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பணத்தை சேமித்து வைப்பதை விட, இப்போது செலவு செய்வதே அவசியமாகும். எப்படி அது? உங்கள் அடிப்படை வாழ்வியலை மாற்றும், உங்கள் வாழ்வின் தரத்தை மாற்றும் பொருட்களை நீங்க வாங்கப் போகிறீர்களா? அடிப்படை தேவையை விட ஆடம்பரமே முக்கியமாகிறது. ஆகையால், ரிலாக்ஸாக இருங்க.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனைகளை தெளிவானதாக மாறும். மற்றவர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காமல் காது கொடுத்துக் கேளுங்கள். உங்கள் வாழ்வை அது கூட மேன்மைபடுத்தலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்களின் வாழ்வின் உயர்ந்த தருணங்கள் இப்போது வெளிப்படும். அலுவலகங்களில் உங்கள் பணிகள் குறித்து பாராட்டுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் உங்களுக்கு கைக் கொடுக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மனக் கட்டுப்பாட்டையும் மீறி உங்களுக்கு பிடித்த காஸ்ட்லியான பொருட்களை வாங்குவீர்கள். அதற்கான உங்களின் முதலீடு அதிகமாக இருக்கும். ஆனால், அதற்காக நீங்கள் எதிர்பார்க்கும் பிரதிபலன் நிச்சயம் கிடைத்தாலும், அடுத்த மாதம் முதலே அதற்கு வாய்ப்புள்ளது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் கற்பனைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்ற தினம் இது. இருப்பினும், இந்த வாரத்தில் உங்களின் முக்கியமான செயல்களில் முடிந்தளவு கை வைக்க வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு வாரம் வரை வெயிட் பண்ணுங்க.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களைச் சுற்றி நடக்கும் வெற்றி, தோல்விகள் உங்கள் கிரக நிலைகளை மையப்படுத்தியே இருக்கும். அதன்படி, வாழ்க்கை மீதான உங்கள் பார்வையின் ஃபியூஸ் குறைந்து போயிருக்கிறது. அதனை மெருகேற்றுவது உங்களின் கடின உழைப்பில் இருக்கிறது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தலையெழுத்தை எதிர்த்து நிற்காதீர்கள். நீங்கள் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் உங்களை அடைந்தே தீரும். அதற்கு பதில், உங்களது நீண்ட கால திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். உலகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், அது என்னவாக இருக்கும்? உலக அமைதி?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.