Advertisment

Rasi Palan 17th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 17th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 16th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 16th May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 17th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 17th May 2019 : இன்றைய ராசி பலன், மே 17, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீங்கள் ஃபார்மில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உங்களது திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாமலும், மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவித்து வருவீர்கள். இப்போது அந்த பிரச்சனைகளை களைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. விரைவில், அனைத்து மாறும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சில பிரிவு அல்லது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், முக்கிய விஷயங்களை ஒருசில நாளைக்கு தள்ளிப்போட்டால் நலம். உங்களுக்குள் சில யோசனைகளை கிடைத்தாலும் அதை எப்போது செயல்படுத்துவது என்பதில் சிக்க நீடிக்கும். எனவே, வாயை மூடி சற்று அமைதியாக இருப்பது நல்லது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குழந்தைகளை கண்டால் குதூகலமாவீர்கள். காரணம், உங்களுக்கான திருமண யோகம் அருகில் வந்துவிட்டது. இதற்கு முன்னதாக குடும்பத்தில் நிலவிய சில சிக்கல்கள், பிரச்சனைகள் இப்போது அகலும். உங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு இப்போதே பிள்ளை சுழி போடுவது உசிதம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எங்கே செல்வது? என்ன செய்வது என்று திக்குத் தெரியாமல் நிற்பீர்கள். உங்களது கிரக நிலைகள் அவ்வாறாக உங்களை பாடுபடுத்தும். எப்போதும் போல நன்றாக நீங்கள் வேலை செய்தாலும், மேலிடத்தில் சம்பந்தமே உள்ள நல்ல ஒர்க் அவுட்டை கூட குறை சொல்வார்கள். அமைதியாக அதை கடந்து செல்வது பெஸ்ட்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் ராசியில் செவ்வாய் இடம் மாறுகிறது. ஆகையால், பிரச்சனைகள் வராமல் தவிர்க்க மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதை அட்வைசாகவோ, ஆலோசனையாகவோ, கருத்தாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வது உங்கள் விருப்பம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நிதி நிலைமையை சமாளிக்க திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். சிக்கனமாக இருக்க வேண்டியதும் அவசியம். உங்கள் எதிர்கால திட்டங்கள் எல்லாம் வாவ் என்று சொல்லும் வகையில் இருந்தாலும், அதை செயல்படுத்த பணம் வேண்டும். இல்லையெனில், அரைகுறையாக அந்த திட்டத்தை இழுத்து மூட வேண்டியிருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால், இரண்டு அடி பின்னே வைக்க வேண்டியிருக்கும். கடினமான தருணங்களை சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இருப்பினும், விரைவில் உங்கள் கிரக நிலைகளின் மாற்றத்தால், சிக்கல் நீங்கி நிம்மதி பெருகும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கடந்த சில மாதங்களாக நீங்கள் மன ரீதியாக சந்தித்து வந்த இன்னல்கள் நீங்கி, மனம் நிம்மதியை ஆராதிக்கும். தனிப்பட்ட காரணங்களால் அனுபவித்த தொல்லைகளும் அகலும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் திட்டங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது. அரசியல் மற்றும் பொதுக் காரியங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த நீங்கள், உங்கள் இலக்கு என்ன என்பதை தற்போது உணருவீர்கள். ஆனால், உங்கள் இலக்கை அருகில் வைத்துக் கொண்டு வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் சரியான திசையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். தற்போதைய நிலையிலிருந்து மேலும் ஏற்றம் பெறுவீர்கள். ஆனால், சில சங்கடங்கள் தவிர்க்க முடியாதது. மறக்காதீர்கள், இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பயணத்தின் போது கூடுதலாக அக்கறையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பயணம் புறப்படும் முன்பே தாமதம், ரத்து என்று சிக்கல்களை சந்திக்கக் கூடும். இவையனைத்தும், கிரக நிலைகளின் காரணமே. அவை உங்கள் பணிகளை தாமதப்படுத்துகின்றன.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு சுவாரஸ்யமான செய்தி கிட்டும். அது நீங்கள் எதிர்பார்த்த முடிவை விட வெகு தொலைவில் இருக்கலாம். நிதி நிலைமையில் நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்வீர்கள். தாராளமாக செலவு செய்யும் நிலையில் இருப்பீர்கள். ஆகையால், சேமிப்பு இங்கு அவசியமாகிறது.

Midhunam Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment