Rasi Palan 17th November 2018: இன்றைய ராசிபலன்

Daily Rasi Palan Tamil, Nov 17, 2018: கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை துவங்குங்கள். வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்

Rasi Palan Today 17th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.

Rasi Palan 17th November 2018 : இன்றைய ராசி பலன், 17 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால், உங்கள் திட்டங்களில் யாரும் தலையிடப் போவதில்லை. அடுத்த ஒரு வாரத்திற்கும் உங்களுக்கு ஹேப்பி தான். அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுக் கொண்டே இருப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பணவரவுகள் இருக்கும். வெற்றிக்காக நீங்கள் தரும் ஒவ்வொரு உழைப்பிற்கும் பயன் உண்டு. எதிர்கால தேவையை உணர்ந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முக்கியமான நிகழ்வு இன்று நடக்கும். அது உண்மையில் உங்களுக்கு பயன் தரும். மேலும் பல நல்ல செய்திகள் உங்களை நோக்கி வரும் என்பது மகிழ்ச்சியான கூடுதல் தகவல்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

அனைத்து விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெற்றிகரமான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, உங்களது செயல்பாடு தனித்து தெரியும். அதுவே உங்களுக்கு வெற்றி தான். உங்களது செயலுக்கு எல்லையே இல்லை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பணம் பத்தும் செய்யும். அதைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கான நாள் இல்லை. ஆனால், உங்கள் பணிகளில் தொய்வு இருக்காது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அடுத்த என்ன நடக்கும் என்று எப்போதும் கணிக்கும் உங்களின் அந்த திறமை தான் உங்கள் வெற்றியை எப்போதும் நிலையாக தீர்மானிக்கிறது. சுவாரஸ்யமான அனுபவங்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கனிவுடன் நடந்து கொள்வது நல்லது. காதலில் வெற்றி கிட்டும். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சுத் திறமையால் எதிரியையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சில விஷயங்களில் அமைதி காப்பதே சிறந்தது. அப்படி, இன்று நீங்கள் பொறுமையுடன் நிதானமாக ஒவ்வொரு செயலையும் அணுக வேண்டும். இதனால், மற்றவர்கள் மனம் புண்படாமல் இருக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சிறப்பாக கையாளும் திறமை கொண்ட உங்களுக்கு, இன்று திருப்தியான நாள். எதற்காகவும் உங்கள் நிமிடங்களை வீணடிக்காதீர்கள். ஆனால், நேர்மையாக செயல்பட முயலுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அனுபவ அறிவே உங்களுக்கு பல இடங்களில் உதவி செய்யும். அரசு பணியில் இருப்போருக்கு மேலதிகாரிகளுடன் நல்ல பெயர் கிடைக்கும். குழந்தை பராமரிப்பில் கவனம் தேவை.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை துவங்குங்கள். வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள் இன்று.

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close