Advertisment

Rasi Palan 21st January 2021: இன்றைய ராசிபலன்

Rasi Palan 21st January 2021 : அன்புக்குரியவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களது  விருப்பங்களைப் பாதுகாக்கும் உணர்வை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.     

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan 21st january, horoscope today, daily horoscope, horoscope 2021 today, january horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், ஜனவரி 7 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 21st January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 21st January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 21, 2021

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : குடும்ப உறவில் மாற்றம் உண்டாகும். விட்டு விலகியோர் உங்களை புரிந்து கொண்டு அவர்களாகவே மீண்டும் தொடர்பு கொள்வார்கள். தீர்க்கமுடியாத முரண்பாடுகளும் நீங்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : தித்திப்பான நாள். பல நாள் கனவு இன்று நிஜமாக வாய்ப்புள்ளது. உங்களது தைரியம் மற்றும் வல்லமை எப்போதும் கொண்டாடப்படும் . பெற்றோர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்யோகம் சிறக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21):  வருமானத்தை அதிகரித்தல் தொடர்பான முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஒவ்வொரு நாளையும்  பெருமையுடனும்,  பெரும் உத்வேகத்துடன் கொண்டு செல்வது முக்கியமாகும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23): இளமை திரும்புதே, புரியாத புதிராச்சே, இதய துடிப்பிலே, பனி காத்தும் சூடாச்சே.....  ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம், தூக்கம் வரவில்லை கொஞ்சம் என்ற பாடல் வரிகளை சுகமாக அசைப்போட தொடங்குவீர்கள்.  இருப்பினும், அன்புக்குரியவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களது  விருப்பங்களைப் பாதுகாக்கும் உணர்வை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  தெளிவற்ற அறிவுறுத்தல்கள் மற்றும் நிச்சயமற்ற கடமைகளை எதிர்கொள்வதில் நீங்கள் எவ்வளவு நெகிழ்வாக இருக்கிறீர்கள் என்பதை சார்ந்து தான்  பணியிடங்களில் முன்னேற்றம் அமையும். புதிய முயற்சிகளில்  ஈடுபடலாம், ஆனால் அதில் முழுமையாக இறங்குவதற்கான நேரம் இது அல்ல.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23): தீர்க்க முடியாத விசயங்களுக்கு சமரசம் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை கற்றுக் கொள்ளுங்கள். சமரசத்தின் முக்கியத்துவம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பெற்றோர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்யோகம் சிறக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வாழ்க்கை தரம் உயர வழி வகை கிடைக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். தொழில், வியாபாரம் எண்ணம் போல் இருக்கும். கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Rasipalan Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Meenam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment