Advertisment

Rasi Palan 23rd October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 23rd October Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 23rd October 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 23rd October 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 23rd October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 23, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நாள். வார்த்தைகளில் நிதானம் கடைபிடிப்பதால் பொருளாதார இழப்பிலிருந்து தப்பிக்கலாம். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மனசஞ்சலம் ஏற்படும் என்பதால் அமைதியாக இருக்கவும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். மனஅமைதிக்கு தியானம் போன்றவற்றை மேற்கொள்ளவும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உங்களது பொறுப்புகளை யாருக்காகவும் தட்டிக்கழிக்க மாட்டீர்கள். மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை நிறுத்திவைப்பீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

காலம் கனியும்வரை காத்திருத்தல் நலம் என்பதை உணர்வீர்கள். வரும்காலங்களில் அசாதாரணமாக தெரிவதால், அதிக கவனமுடன் இருப்பது நல்லது. அனைத்து விவகாரங்களிலும் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும்..

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உறவுகள் பகையாகும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். பணிசார்ந்த விவகாரங்களில் அதிக இடைஞ்சல்கள் இருக்கும். மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதிர்கால நற்வாழ்விற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனம் ஆன்மிக வழியில் பயணிக்க துவங்கும். இறைவழிபாடுகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் அதிக கவனம் அவசியம். கிரகங்களின் பார்வையினால், உங்களது நடவடிக்கைகளில் மாற்றம் காண்பீர்கள். நீண்டகால நண்பரை சந்திப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

புதிய உத்வேகத்துடன் இன்றைய நாளை துவங்குவீர்கள். எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். கேள்வியிலேயே பதில் உள்ளது என்பதை உணர்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்களின் தவறுகளுக்காக மற்றவர்களை பொறுப்பேற்க சொல்வீர்கள். பொதுநலமாகவே செயல்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment