Rasi Palan 29th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 29th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan 29th July: இன்றைய ராசிபலன்
Rasi Palan 29th July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 29th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 29th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 29, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மற்றவர்கள் உங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் ராசியுடன் சூரிய இப்போது நெருக்கமாக சங்கமித்துள்ளது. ஆகையால், அடிச்சு தூள் கிளப்ப இன்று மிகச் சரியான நாள். இந்த வாரத்தை நீங்கள் தவறவிட்டால், மிக அதிக நாட்களுக்கு காத்திருக்க வேண்டியநிலை ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சந்திரனின் ஆதிக்கம் அடுத்த சில நாட்களுக்கு உங்கள் ராசியில் வரிசைக் கட்டி நிற்கிறது. ஆகையால், இப்போது நீங்கள் எடுக்கும் முடிவு, அடித்த சில வாரங்களுக்கும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். சிறப்பான தகவல்கள் இந்த வார இறுதியில் கிட்டும். அதனால், மிகப்பெரிய இலக்குகளை அமைப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

ஆழமான பொது வாழ்க்கை பங்கினை இந்த காலக்கட்டத்தில் சந்திரன் உங்களிடம் விதைக்கும். இதற்காக உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரையும் கன்வின்ஸ் செய்து உழைப்பைக் கொட்ட முயற்சி செய்வீர்கள். உண்மை எதுவாக இருப்பினும், சிக்கல் என்பது இருக்காது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பெரிய அளவிலான மாற்றத்திற்காக எதிர்நோக்குவீர்கள். சில குறிப்பிட்ட கிரகங்கள் உங்களுக்கான பாதைகளை அமைத்துக் கொடுக்கும். வெற்றியுடன் பயணம் செய்வீர்கள். ஆனால், வழக்கத்தைவிட கூடுதலாக உழைத்தால் தான் உங்களுக்கான முழு வெற்றி கிடைக்கும் அல்லது வசப்படும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

முக்கிய முடிவுகளை எடுக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அவசரம் வேண்டாம். ஆனால், போடும் அஸ்திவாரம் மிக வலிமையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நிறை குடமும் தழும்பாது; காலி குடமும் தழும்பாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சந்திரன் உங்களுக்கான வளமையை பெருக்க பெரிதும் உதவும். தவறுகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள உங்களுக்கு போதுமான இடம் இருக்காது. நீங்கள் யோசிப்பதை விட, எதிர்காலம் மிக வேகமாக நகரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கென்று சில வரைமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். இதனால், உங்கள் தவறுகளின் பட்டியல் குறையும். உங்கள் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வெற்றிப் பெறுவீர்கள், இருந்தாலும், சில தோல்விகளை சந்திப்பீர்கள். புரியாத புதிரில் இருந்து சந்திரன் உங்களைக் காப்பாற்றும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சில நம்ப முடியாத நாடகங்கள் அரங்கேறலாம். ஆனால், அந்த நாடகம் உங்களுக்கு இறுதியில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதற்காக உங்கள் மனைவிக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கலாம். எதிர்காலத்திற்கான சிந்தனையை இப்போதே தொடங்குவது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் திட்டங்களுக்கு உடனே முடிவு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சந்திரனின் அமைப்பில் சில மாற்றங்கள் இருப்பதால், இப்போது நீங்கள் எடுக்கும் முடிவு, இந்த வார இறுதியில் கூட மாறும் வாய்ப்பு ஏற்படும். எனினும், உங்கள் பணியில் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்துவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களின் நல் சிந்தனை ஓட்டங்களை அதிகப்படுத்துங்கள். உங்கள் உடல் நலத்தில் நீங்கள் அக்கறை செலுத்தினால் தான், உங்களை கனவுகளை நிறைவேற்ற முடியும். சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரமிது. அதேசமயம் ஓய்வும் உங்களுக்கு தேவை.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வலிமையான சந்திர அமைப்பு, உங்கள் எமோஷன்களை மறைத்துவிடும். உட்கார்ந்து பகல் கனவு மட்டும் காணாமல், அதை சாத்தியப்படுத்த முயற்சி செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக நேரம் செலவழியுங்கள். உடனே அவர்களுக்காக சென்று ஆறுதல் கொடுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் குணாதிசயத்துக்காக அதிகம் போற்றப்படுவீர்கள். சில சமயம், உங்களின் அவசர புத்தியால் தடுமாறுவீர்கள். உங்களே நீங்களே சுய விமர்சனம் செய்து கொள்வீர்கள்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 29th july

Next Story
Rasi Palan 27th July: இன்றைய ராசிபலன்Rasi Palan 27th July: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express